அன்பின் பெற்றோர்களே...!
(அய்யூபி)
உங்கள் இளம் வயது மகனை, மகளைப் பற்றி நீங்கள் எவ்வளவு தூரம் அவதானமாக இருக்கிறீர்கள்? அவர்கள் சரியான வழியில் தான் செல்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறீர்களா? நல்லதொரு பாடசாலையில் சேர்த்து விட்ட திருப்தியில் நீங்களா இருக்கலாம்.
இன்று 28-12-2012 காலை நான் கண்ட ஒரு சம்பவம் இதை எழுதுவதற்குத் என்னைத் தூண்டியது. இன்று காலை 8 மணிக்கு பேரூந்துக்கு ஏறும் போதே ஒரு அதிர்ச்சி தரும் காட்சி. பேரூந்தின் மத்திய ஆசனம் ஒன்றில் நன்கு ஹிஜாப் அணிந்த, 25 வயது மதிக்கத்தக்க ஒரு முஸ்லிம் யுவதியும் ஒரு இளைஞனும் தங்களையே மறந்து கொஞ்சிக்கொண்டிருந்தனர். கண்டவுடனேயே எனக்குக் கோபமும் கவலையுமாக இருந்தது. ஏன் இவ்வாறு எமது சமூகம் சீரழிகிறது என்று மிகவும் வருத்தமாக இருந்தது. சற்று அவதானித்துப் பார்த்த போது தான் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அவ்விளைஞனின் கையில் தடித்த ஒரு வெள்ளை நிற “பிரித்” நூல் இருந்தது. ஆம்! அவ்விளைஞன் ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு வாலிபன். இது ஒரு உதாரணம் மட்டுமே.
இவ்வாறு ஏராளமான நிகழ்வுகள் நாளாந்தம் நடைபெறுகின்றன. இவற்றில் அதிகம் சீரழிவது எமது சமூகத்தின் இளம் யுவதிகள் ஆகும். இதை இன்னுமோர் உதாரணத்தால் விளக்க முயற்சிக்கிறேன். காலி வீதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியைச் சந்தித்த எமது சகோதரர் ஒருவருக்கு மிகவும் கசப்பான ஓர் உண்மையை செல்லியிருக்கிறார் அப் பொலிஸ் அதிகாரி. கடற்கரையோரங்களில் சுற்றித்திரியும் இளம் காதல் சோடிகளை போலீசார் அவ்வப்போது சுற்றிவளைத்து, அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரிப்பார்கள். அவ்வதிகாரியின் தகவலின்படி இதில் ஹிஜாப், ஹபாயா அணிந்த முஸ்லிம் மாணவிகள் ஏராளமானவர்கள் மாட்டிக்கொள்கிறார்களாம். இவர்கள் பகுதிநேர வகுப்புகளுக்கு என்று சொல்லிக் கொண்டு தாய் தந்தையரை ஏமாற்றி விட்டு, வீட்டிலிருந்து வெளியே வருகிறவர்கள்.
இதில் மிகவும் ஆபத்தான பகுதி என்னவென்றால் சிங்கள இனவாதிகள் நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு திட்டத்துடன் வேலை செய்வதாகும். அதாவது, முஸ்லிம் சமூகம் திட்டமிட்ட ரீதியில் முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தி சிங்கள யுவதிகளை காவு கொள்வதாக ஒரு கண்மூடித்தனமான குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். அது மட்டுமல்லாது, அதற்குப் பதிலடியாக சிங்கள இளைஞர்களை முஸ்லிம் யுவதிகளை ஏமாற்றிக் காதலிக்குமாறு தூண்டுகின்றனர். தற்போது இவ்வாறு பல முஸ்லிம் பெண்கள் மாட்டிக்கொண்டுள்ளமை கவலைக்குரியதாகும்.
அவை எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களது பிள்ளை அவ்வாறான கெட்ட வழிகளில் செல்ல வாய்ப்பே இல்லை என்ற நல்லெண்ணத்தில் நீங்களும் இருக்கலாம். அவர்கள் உங்களுக்கு நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கையானவர்கள் என்று எம்மில் பலர் கற்பனை செய்து கொண்டு, பிள்ளைகளுக்கு பூரண சுதந்திரம் என்ற பெயரில் பிள்ளைகளைப் படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறார்கள். ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா’ என்று எண்ணும் அளவுக்கு நம்பவே முடியாத பல பெற்றோர்களின் பிள்ளைகள், நம்பவே முடியாத பல சிக்கல்களில் மாட்டிக் கொண்ட பல சம்பவங்களை நாம் அறிவோம்.
எனவே, பெற்றோர்களே! உங்களது பிள்ளைகள் பற்றிக் கூடிய அவதானம் செலுத்துங்கள். அவர்கள் உங்கள் அமானிதங்களாகும்.
“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; “ (அல்-குர்ஆன் 66:06)
ஆகவே, பெற்றோர்கள் என்ற வகையில் உங்களிடமிருந்து அவர்கள் எதையும் மறைக்கவோ அல்லது இரகசியமாக வைத்துக்கொள்ளவோ முடியாது. அவர்களின் நடவடிக்கைகளில் கூடிய அவதானம் செலுத்துங்கள். அவர்களின் கைத்தொலைபேசிகள், கணணிகள், பேஸ்புக் பக்கங்கள், மின்னஞ்சல்க் கணக்குகள் என்பன அவர்கள் எந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை மிகவும் இலகுவாகக் காட்டிக் கொடுத்துவிடும். எனவே அவற்றை அவ்வப்போது உரிமையுடன் சோதனை செய்து பாருங்கள். சர்வதேசப் பாடசாலைகளில் உங்களது பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள் எனில் நீங்கள் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும்.
எனவே, தவறு செய்யும் பிள்ளைகள் தொடர்ந்தும் தவறு செய்து கொண்டே இருப்பது பெற்றோர்களின் உதாசீனத்திலாகும். எனவே, உங்கள் பிள்ளைகள் மீது நீங்கள் காட்டும் சிரத்தை உங்கள் குடும்பத்தை இவ்வுலகில் நிம்மதியாகவும், கௌரவமாகவும், தலைகுனிவின்றியும் வாழச் செய்வதுடன், மறுமையில் நரக நெருப்பிலிருந்தும் பாதுக்காக்கும், இன்ஷா அல்லாஹ்.
வஸ்ஸலாம்.
எனது நண்பன் கூறிய ஒரு சம்பவம் உண்மை சம்பவம் இது, இவாறான ஒரு சம்பவத்தை கண்டு எனது நண்பன் அந்தப் பெண்ணிடம் விசாரித்த போது அப்பெண் கூறிய பதில் என்னை முஸ்லிம் வாலிபர்கள் யாரும் என்னை காதலிப்பது இல்லை அதலால் தான் நான் சின்ஹல வாலிபரை கதலிக்கிறேன் என பதில் கூறியுள்ளார் மிகவும் கவலையும் கேவலமும் படக்கூடிய ஒரு விடயம்.
ReplyDelete