வாய்ச்சண்டையில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் அபராதம்..!
பெங்களூரில் நடந்த டுவென்டி 20 போட்டியின்போது வாய்ச்சண்டையில் ஈடுபட்ட இந்திய பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் ஆகிய இருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே டுவென்டி20 போட்டி நடந்தது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 18வது ஓவரில் இஷாந்த் சர்மாவுக்கும், கம்ரான்அக்மலுக்கும் இடையே திடீரென வாய்ச்சண்டை மூண்டது.
நடுவர்களும், கேப்டன் டோணி உள்ளிட்ட இந்திய வீரர்களும் தலையிட்டு பிரச்சினை பெரிதாகாமல் தடுத்து விலக்கி விட்டனர். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. அதன்படி அக்மலுக்கு அவரது போட்டி சம்பளத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. இஷாந்த் சர்மாவுக்கு 15 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சண்டையை தொடங்கியவர் இஷாந்த் சர்மாதான் என்பதால் அவருக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போட்டு நடுவரான ரோஷன் மகானமா தெரிவித்துள்ளார்.
Post a Comment