கண் பார்வையற்ற இந்தியருக்கு உயர் பதவி வழங்கியுள்ள ஒபாமா
அமெரிக்காவில் வாழும் பார்வையற்ற இந்திய இளைஞர் சச்சின் தேவ் பவித்ரன். இவர் உட்டா பல்கலைக்கழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான திட்ட இயக்குனராக தற்போது பணியாற்றி வருகின்றார்.
2002-ம் ஆண்டு முதல் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அமெரிக்காவின் பல்வேறு அமைப்புகளில் இவர் பணியாற்றியுள்ளார். உட்டா பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பி.எஸ்., எம்.ஸ்., என பல பட்டங்களை பெற்றுள்ள இவருக்கு 2007-ம் ஆண்டு அமெரிக்காவின் பார்வையிழந்தவர்களுக்கான தேசிய சம்மேளனம், கென்னத் ஜெர்னிகன் ஸ்காலர்ஷிப் உதவி வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில், அமெரிக்க அரசின் நிர்வாகத்தில் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பின் உயர்பதவியில் சச்சின் தேவ் பவித்ரனை நியமித்து அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
'அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளின் மூலம் அனுபவம் பெறுவார்கள். இந்த நிர்வாகத்தில் அவர்கள் சேவையாற்றுவதை எண்ணி நான் பெருமைப்படுகின்றேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றும் நாட்களை நான் ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
Post a Comment