Header Ads



வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு முதலமைச்சர் நேரில் சென்று பார்வை (படங்கள்)

(எம். நளீஜ்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிண்ணியா, முதூர், கிரான், கிளிவெட்டி, வெருகல், லங்கா பட்டினம் போன்ற அனைத்து பிரதேசங்களையும் கிழக்கு மாகாண  முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

கிண்ணியா பூவரசன்தீவு கிராமத்திற்கான தரைவழி பாதை முற்றாக துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதிக்கு இயந்திரப் படகு மூலம் விஜயம் செய்த முதலமைச்சர் அப்பிரதேச மக்களுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாமையும் மேற்பார்வையிட்டார்.

அதேவேளை கிளிவெட்டி, வெருகல், முதூர் பகுதிகளில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கான சமைத்த உணவு,  அவசர உதவிகளுக்கான ஏற்பாடுகளையும் முதலமைச்சர் மேற்கொண்டார்.

வெள்ளமட்டம் மேலும் உயர்வடையும் நிலை தோன்றுமாயின், உடனடி மீட்புப் பணிகளில் ஈடுபட தயார் நிலையில் இருக்குமாறும் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பான இராணுவம், கடற்படை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சரின் இவ்விஜயத்தின் போது பிரதேச செயலாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், போலீஸ் பொறுப்பதிகாரிகள், இராணுவ பொறுப்பதிகாரி, கடற்படை பொறுப்பதிகாரி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சஹீத் உட்பட பல முக்கிய அதிகாரிகள் இணைந்துகொண்டனர்.








No comments

Powered by Blogger.