சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
2013 ஆம் ஆண்டிற்கான சட்டக்கல்லூரி கற்கை நெறிக்கான நுழைவுப் பரீட்சையில் இம்முறை மொத்தமாக 309 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் சுமார் 75க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி நுழைவுப்பரீட்சை பாடங்களை கொழும்பு றோயல் அக்கடமி நிறுவனத்தில் கற்று சித்தியெய்திய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று 23-12-2012 மேற்படி அக்கடமியில் சட்டத்தரணி எம்.கே.எம்.சஜாத் தலைமையில் இடம்பெற்றது.
மும்மொழிகளிலும் நடைபெற்ற மேற்படிப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 1ஆம், 2ஆம் மற்றும் 5ஆம் இடங்களை மேற்படி அகடமியில் நுழைவுப் பரீட்சைக்கான தயார்படுத்தல் வகுப்பில் கற்ற மாணவர்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இடத்தைப் பெற்ற திருமதி நுஸ்ரத் ஸாசிர் அலி, இரண்டாம் இடத்தைப் பெற்றக் கொண்ட செல்வி. எம்.எச்.இஸட்.அஷ்ரா மற்றும் 5ஆம் இடத்தைப்பெற்ற செல்வி. எம்.எஸ்.எப். றிஸ்மினா உட்பட மேற்படி அகடமியில் சித்தியெய்திய முஸ்லிம் தமிழ் மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் வழைங்கி கௌரவிக்கப்பட்ட பின்னர் பயிற்சி ஆசிரியர்களான சட்டத்தரணி எம்.கே.எம்.சஜாத் மற்றும் சட்டக்கல்லூரி மாணவன் எம்.பி.எம்.றமீஸ் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட படங்கள்.
மற்றும் 1ஆம், 2ஆம், 5ஆம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்களை நிகழ்வின் பிரதம அதிதி கிரேஷ்ட சட்டத்தரணி முர்சித் மஹ்றூப் மற்றும் கௌரவ அதிதியாகக் கலந்த கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் வழங்கி கௌரவிப்பதை படங்களில் காணலாம்.
Post a Comment