இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சண்டைநிறுத்தம் செய்ய தயார் - தலிபான்கள்
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் சண்டை நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பின்னர் அதன்படி அரசியலமைப்பையும் சட்டத்தையும் மாற்றியமைக்கவேண்டும். ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக போராடிவரும் புரட்சியாளர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு, பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை நிறுத்தவேண்டும்.
அமெரிக்காவின் கூலிப்படையாக பாகிஸ்தான் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிறகே நாங்கள் பாகிஸ்தான் அரசுடனான சண்டை நிறுத்தத்திற்கு ஒத்துக்கொள்வோம். இவ்வாறு பாகிஸ்தான் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment