Header Ads



அணு ஆயுதங்களை அதிகரிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் - அமெரிக்கா



பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவத்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்டிம்சன் இன்ஸ்டிட்டியூட்டைச் சேர்ந்த ஆய்வாளர் மைக்கல் கிரிப்பான் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:÷அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கு அணு ஆயுதத் திட்டங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணு ஆயுதத்தை அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக பயன்படுத்தக்கூடிய வலிமையான கருவியாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கருதுவதே இதற்கு காரணம்.

இதையடுத்து, பாகிஸ்தான் இருப்பு வைத்துள்ள அணு ஆயுதங்களுக்கு ஏற்ப, இந்தியாவும் அவ்வகை ஆயுதங்களை தயாரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும், அணு ஆயுதங்களை வைத்து போரில் ஈடுபடும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை. அதை ஒரு அரசியல் ரீதியான வலிமை சேர்க்கும் கருவியாக மட்டுமே இந்தியா பார்க்கிறது. அதோடு, இந்தியாவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம், அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது.

அணு ஆயுதங்களை அதிகரிக்க நினைக்கும் பாகிஸ்தான், தொடர்ந்து சர்வதேச நாடுகளின் கண்டனத்தை எதிர்கொண்டு தனிமைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ள பாகிஸ்தான்:÷ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் சில பகுதிகள் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளன. இது, ஆப்கன் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது'' என்று  தெரிவிக்கப்பட்டுளளது.

இதற்கிடையே பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""கடந்த இரு மாதங்களாக பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயும் உறவு மேம்பட்டுள்ளது. 

இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம், எல்லைத்தாண்டி வரும் பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதால், ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் இருப்பதால், அதனுடனான நல்லுறவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் தருகிறது'' என்றார்.

""பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.