சாப்பாடு வாங்குவதற்காக ஒரு மணித்தியாலம் புகையிரத்தை நிறுத்திய சாரதி - பண்டராவளையில் சம்பவம்
(Sfm) பதுளையில் இருந்து கொழும்பு நோக்கு வந்த உடரட்டமெனிகே புகையிரதம் இன்று காலை பண்டாரவளை தொடரூந்து நிலையத்தில் ஒரு மணித்தியாலம் வரையில் தரித்து நின்றுள்ளது.
குறித்த புகையிரத செலுத்துனர், காலை உணவை கொள்வனவு செய்வதற்காக புகையிரதத்தை புகையிரத நிலையத்தில் தரித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் குறித்த புகையிரத செலுத்துனரை தொடர்பு கொண்டு வினவிய போது, தாம் பண்டாரவளை புகையிரத நிலைய அதிபருக்கு தமக்கான காலை உணவை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறு கோரிய இருந்த போதும், அதற்கு அவர் தவறிவிட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே தாம் புகையிரதத்தை தரித்து நிறுத்திவிட்டு பண்டாரவளை நகரில் தமக்கான உணவுப் பொதியை பெற்றுச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
புகையிரத நடத்துனருக்கான உணவுப் பொதியை புகையிரத நிலையத்தின் அதிபரே ஒழுங்கு செய்ய வேண்டும் என்ற நியதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் புகையிரத திணைக்களத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதறகாக இரண்டு பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்
Post a Comment