புத்தளம் வீதிகள் எப்போது திருத்தப்படும்..?
புத்தளம் இலங்கையின் வடமேற்கு கடற்கரையை அண்மித்த ஓர் ஊராகும். புத்தளம் நகரப் பிரதேசத்தில் முஸ்லிம்களே பெரும் பாண்மையாக வசிக்கின்றனர். இங்கு வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண வருமானம் பெரும் மக்களாவர். புத்தளம் நகரசபைக்கு உட்பட்ட மரைக்கார் வீதி, நெடுங்குளம் வீதி, நியு செட்டிலமண்ட் வீதி, வான்வீதி, வெட்டுக்குளம் வீதி, இரண்டாம் குறுக்குத் தெரு உட்பட்ட புத்தளத்தின் அனைத்து வீதிகளும் மிக மோசமாக காணப்படுகின்றன. வீதிகள் தோறும் குன்றும் குழிகளும் காணப்படுவதுடன் மலைகாலத்தில் அக்குழிகளில் தண்ணீர் தேங்கி பாதசாரிகள், பாடசாலை மாணவ மாணவ மாணவிகள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் இடையூறுகளைச் செய்து வருகின்றது. இந்த வீதிகள் கடந்த முப்பது வருடங்களாக திருத்தப்படாமல் உள்ளன.
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள சிற்றூர்களின் வீதிகள் எல்லாம் தார் வீதிகள், கார்பட் வீதிகள் மற்றும் கொங்கிறீட் வீதிகள் போடப்பட்டு அழகாக காணப்படும் போது புத்தளத்து வீதிகள் மட்டும் இவ்வாறு காணப்படுவது ஏன்?
நாட்டின் பல்வேறு பிரதேச சபைகளும் தமது பிரதேசத்திலுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட வீதிகளை மீளமைத்துள்ள போதும் புத்தளத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாதது ஏன்? புத்தளம் நகரசபைத் தலைவராகவும் அதன் உறுப்பினர்களில் பெரும்பாண்மையாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருக்கின்ற போதிலும் இவ்வீதிகள் திருத்தப்படாமைக்கான காரணங்கள் யாது என மக்கள் ஏக்கத்துடன் காணப்படுகின்றனர்.
Post a Comment