Header Ads



பாலியல் குற்றம்செய்த கிறிஸ்தவ பாதிரியார் இலங்கையிலிருந்து தப்பியோட்டம்


சிறார்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் தொடர்பில் சர்வதேச காவல்துறையால் தேடப்பட்ட போது இலங்கையில் மறைந்திருந்ததாக  கூறப்பட்ட அவுஸ்திரேலியர் இங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரே இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த புதன்கிழமை பேனாட் மெக்ராத் என்ற குறித்த  அவுஸ்திரேலியர், சிங்கப்பூர் வானூர்தி ஒன்றின் மூலம் வெளியேறியுள்ளார்.  இருந்தபோதும், மறுதினமே இதுதொடர்பில் தம்மால் இதனை கண்டுபிடிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

65 வயதான கத்தோலிக்க பாதிரியான அவுஸ்திரேலியருக்கு எதிராக கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் சிறுவர் வன்புணர்வு தொடர்பில் 500 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், நியூஸிலாந்தில் வசித்து வந்த அவர் அங்கிருந்து தப்பிவந்து இலங்கையின் மலையகப் பகுதியொன்றில் தங்கியிருந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்ராத்துக்கு எதிராக ஓரினச்சேர்க்கை தொடர்பில் 30 குற்றச்சாட்டுக்களும், 10 வயதுமுதல் 18 வயது வரையிலான ஆண் பிள்ளைகளுடன் வன்புணர்வில் ஈடுபட்டமை குறித்த 30 குற்றச்சாட்டுக்களும், ஆசிரியைகளுடன் பாலியல் வன்புணர்வுகள்  தொடர்பில் 102 குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன. sfm

No comments

Powered by Blogger.