Header Ads



எகிப்தின் புதிய அரசியலமைப்பு இஸ்லாமிய கிலாபத்திற்கு துணைநிற்குமா..? (விபரம் இணைப்பு)



(tn)
தேசத்தின் அடையாளம்: எகிப்து அரபு குடியரசு பிரிக்க முடியாத ஒன்றுபட்ட இறையாண்மையுள்ள சுதந்திர தேசமாகும். எகிப்து அரபு மற்றும் இஸ்லாமிய தேசங்களின் (உம்மா) ஓர் அங்கமாகும். ரத்துச் செய்யப்பட்ட 1971 அரசியலமைப்பில் எகிப்து அரபு குடியரசு குடியுரிமையை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக நாடு என்றும் அது எகிப்து அரபு தேசங்களின் ஓர் அங்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இஸ்லாம் மற்றும் ஷரிஆ: முந்தைய அரசியலமைப்பில் கூறப்பட்ட 2 ஆவது உறுப்புரையான தேசத்தின் உத்தியோக பூர்வ மதம் இஸ்லாம் என்றும், அரச மொழி அரபு என்றும் ஷரிஆ சட்டம் மூல ஆதாரம் என்பதும் புதிய அரசியல மைப்பிலும் அவ்வாறே தக்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால் 219 ஆவது உறுப்புரை அது பற்றி மேலும் விபரிகிக்கிறது. 

அதில் பொது ஆதாரங்கள் மற்றும் சட்ட சாஸ்திரம் ஆகியவற்றிற்கு ஷரிஆ சட்டம் ஆதாரமாக உள்ளடக்கப்படுவதோடு, அது சுன்னி இஸ்லாமிய சித்தாந்தங்கள் மற்றும் பெரும்பான்மை முஸ்லிம் அறிஞர்கள் ஏற்கும் ஆதாரமாக உள்ளது. மத சிறுபான்மையினர், கிறிஸ்தவ மற்றும் யூதர்களுக்கு அவர்களது சமூக நிலை மற்றும் மத விவகாரங்களில் அவர்களது மத சட்டம் முக்கிய ஆதாரமாக இருக்கும். 1971 அரசியலமைப்பில் இது பற்றி விபரிக்கப்படவில்லை.

மதம்: 43 ஆவது உறுப்புரையில் முந்தைய அரசியலமைப்பில் கூறப்பட்டவாறே அரசு நம்பிக்கை சுதந்திரம் மற்றும் மத செயற்பாடுகளுக்கான சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று 44 ஆவது உறுப்புரையில் இறைத்தூதுவர்கள் மற்றும் தூதுத்துவத்தை அவமதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

அல் அஸ்ஹர்: ரத்துச் செய்யப்பட்ட 1971 அரசியல் அமைப்பில் அல் அஸ்ஹர் பற்றி எதுவும் கூறப்படவில்லை. ஆனால் புதிய அரசியல் அமைப்பில் அல் அஸ்ஹர் சுயாதீனமான மற்றும் ஒரு பரந்துபட்ட நிறுவனமாகும். அது எகிப்து மற்றும் சர்வதேச அளவில் இஸ்லாமிய பணியை முன்னெடுக்கிறது. ஷரிஆ சட்டங்கள் தொடர்பான விடயங்களில் அல் அஸ்ஹர் அறிஞர்களிடம் ஆலோசனை பெறப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்: விவாகரத்து மற்றும் விதவை பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை அரசு வழங்கும். 30 உறுப்புரையில் சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களினது உரிமைகள் மற்றும் கடமைகள் சமமானது என்று கூறப்பட்டுள்ளது.

இராணுவம்: பாதுகாப்பு படையினருக்கு பாதிப்பை செலுத்தும் குற்றச்சாட்டுகள் தவிர்த்து சாதாரண பொதுமக்களை இராணுவ நீதிமனறத்தில் நிறுத்த அனுமதிக்கப்படமாட்டாது. முந்தை அரசியலமைப்பில் இது பற்றி விபரிக்கப்படவில்லை.

ஊடகம்: நீதிமன்ற ஆணை இன்றி ஊடக நிறுவனம் ஒன்றை இடை நிறுத்தவோ அல்லது மூடவோ அல்லது அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யவோ முடியாது என 48 ஆவது உறுப்புரை விவரிக்கிறது. ஆனால் முந்தைய அரசியல் அமைப்பில் இந்த உறுப்புரை இடம்பெறவில்லை.

ஜனாதிபதியின் தவணை: ரத்துச் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசியல் அமைப்பில் தேர்தல் முடிவு தொடக்கம் ஜனாதிபதியின் தவணைக் காலம் 6 ஆண்டுகளாக இருக்கும் என்றும் ஜனாதிபதிக்கு வரையறுக்கப்படாத தவணைகளுக்கு தொடர்ந்தும் பதவி ஏற்க முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய அரசியல் அமைப்பில் தேர்தல் முடிவு தொடக்கம் ஜனாதிபதியின் தவணைக்காலம் 4 ஆண்டுகள் இருக்கும் எனவும் ஜனாதிபதிக்கு அதிகபட்சம் இரண்டு தவணைகளுக்கே போட்டியிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் தலைவர்களுக்கு தடை: புதிய அரசியல் அமைப்பின் 232 ஆவது உறுப்புரையில், முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் கலைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அல்லது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உட்பட அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கு 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. மத்ஹப்வழியில் சென்று கிலாபத் பெறமுடியாது,குர்ஆன் ஹதீஸ் ஒன்றே ஒரே வழி கிலாபத் ஏற்படுத்துவதற்கு.

    ReplyDelete
  2. kurr aaan sunnaa valill senru kilapaththai pera muyatcchi seiyungallllll

    ReplyDelete
  3. தொடங்கிட்டாங்கயா..... காத்திரமான கருது கூற........

    ReplyDelete

Powered by Blogger.