மக்காவில் வைத்து புகைப்பிடிப்பதை கைவிட்ட பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப். இவர் கடந்த அக்டோபர் மாதம் சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசிஸ் அழைப்பின் பேரில் மெக்கா சென்றார். அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமும் புகையிலை போடும் பழக்கமும் இருந்தது. மெக்காவில் வைத்து இந்த இரு பழக்கத்தையும் கைவிட முடிவு செய்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் திரும்பிய பர்வேஸ் அஷ்ரப் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையும், புகையிலை போடுவதையும் அடியோடு கை விட்டார். பாகிஸ்தான் உயர் மட்ட தலைவர்கள், எம்.பி.க்கள் மந்திரிகள் என பெரும்பாலோரிடம் சிகரெட் மற்றும் புகையிலை பழக்கம் காணப்படுகிறது.
ஜனாதிபதி ஆசிப் சர்தாரியும் கூட சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவர். தற்போது பாகிஸ்தான் பிரதமர் சிகரெட் மற்றும் புகையிலை பழக்கத்தை கைவிட்டது அனைவருக்கும் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக அவரிடம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அவரது அலுவலக ஊழியர்களும், குடும்ப டாக்டரும் பல வருடங்களாக இந்த பழக்கத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். தற்போது அவர் அதை ஏற்றுக் கொண்டார். சிகரெட் - புகையிலை பழக்கத்தை கைவிட்ட ஒரே தலைவர் இவர்தான் என்று பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழ்ந்துள்ளன.
Post a Comment