Header Ads



ஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை கிளை ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு (படங்கள்)


(M.R.M. Rayees (Naleemi))

“எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழவைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (சூரா மாயிதா 32)

இனங்களுக்கிடையிலான நல்லுறவைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் இஸ்லாம் பல்வேறு வழிமுறைகளை எமக்கு காட்டித்தந்துள்ளது. இதன் ஒரு வழிமுறையாக தனது இரத்தத்தை தானம் செய்வதாகும். 

இலங்கையில் ஆரம்ப காலத்தில் இரத்த தானம் செய்வது ஒரு பாவமான செயல் என்ற கருத்திலிருந்த சமூகம் அல்ஹம்துலில்லாஹ் தற்போது அது நன்மையான காரியம் என்ற  கருத்து சமூகத்தில் பரவலாக காணப்பட்டு வருகிறது.  இரத்தம் தேவைப்படக்கூடியவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவரது தேவையை கவனிப்பது அவரது தேவையை கருத்திற்க் கொண்டு உதவி செய்வது சகவாழ்வுடன் வாழ்வதற்கு மென் மேலும்  உதவியாக இருக்கும்

அந்த வகையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லைக் கிளை 7 வது தடவையாக ஏற்பாடு செய்யத இரத்ததான முகாம் 16.12.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவனல்லை ராழியா வரவேற்பு மன்டபத்தில  வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்தது.

இதில் சுமார் ஆண்கள் பெண்களுமாக சேர்ந்து 494 பேர்  தங்களது இரத்தத்தை வழங்கினார்கள். முதல் தடவையாக கண்டி இரத்த வங்கிக்கு அதிக இரத்தம் வழங்கிய நிகழ்வு. இது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் இந்நிகழ்வில் பங்குபற்றிய மாற்று மத வைத்தியர்கள் தாதிகள் இரத்த வங்கி நிர்வாகிகள் அனைவரும் பராட்டிப் பேசியதுடன் இது மாதிரியான நிகழ்வுக்கு எதிர்காலத்திலும் உதவி செய்வதாக வாக்குறுதியும் அளித்தனர்.






No comments

Powered by Blogger.