துப்பாக்கிகளை வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்
அமெரிக்காவில், துப்பாக்கி வைத்திருக்க தடை வரலாம் என்பதால், ஏராளமானவர்கள், இப்போதே துப்பாக்கிகளை வாங்கி குவித்து வருகின்றனர்.அமெரிக்காவில், துப்பாக்கி சூடு சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. கடந்த வாரம், ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில், 26 பேர் பலியாயினர்.
இந்த சம்பவத்தினால் கலக்கமடைந்த அமெரிக்க அரசு, "பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு, தடை விதிக்கலாமா?' என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இதற்கிடையே, பென்சில்வேனியா, டெக்சாஸ், மிசோரி உள்ளிட்ட மாகாணங்களில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய துப்பாக்கிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன."பொது மக்கள் துப்பாக்கி வைத்திருக்க தடை வரலாம்' என்ற, கருத்து பரவலாக காணப்படுவதால், இந்த துப்பாக்கி சந்தையில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, துப்பாக்கிகளை வாங்கி செல்கின்றனர். இன்னும் பல கடைகளில், அதிக விலைக்கு துப்பாக்கிகள் விற்கப்பட்டன.ஆனால், விலையை பொருட்படுத்தாத, துப்பாக்கி ஆர்வலர்கள், இரண்டு மூன்று துப்பாக்கிகளை வாங்கி சென்றனர்.துப்பாக்கி வைத்திருக்க தடை விதிக்கும் அரசின் ஆலோசனையை இவர்கள் எதிர்க்கின்றனர்.
Post a Comment