தாய்நாட்டை நேசித்தமையாலே வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் - பஷில் ராஜபக்ஸ
(வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கை தாய் நாட்டை நேசித்தமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டமை என்பவற்றுடன்,முஸ்லிம்கள் என்பதாலேயே வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் 48 மணித்தியாலயங்களுக்குள் புலிகளினால் வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பஷில் ராஜபக்ஷ, இத்தியாகத்தை செய்த முஸ்லிம்கள் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் சகல வசதிகளுடனும் மீண்டும் வாழ்வதற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வவுனியா சாளம்பைக்குளம் அல்-அக்ஷா மஹா வித்தியாயத்தின் மூன்று மாடிக்கானஅடிக்கல்லினை நாட்டி வைக்கும் நிகழ்வில் இன்று சனிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தமதுரையில்,
கடந்த 30 வருட காலமாக தாண்டவமாடிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் அமைதியாக தற்போது வாழகின்றனர்.இந்த சமாதானத்தை பெறுவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசும், பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும்,முப்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையினால் தான் இன்று நாம் இங்கு வாழ முடிகின்றது.
அன்று புலிகள் இப்பிரதேசத்திலுள்ள அனைத்தையும் துவம்சம் செய்தனர்,வைத்தியசாலைன் கதவுகளை அகற்றியத மட்டுமல்லாமல்,பெறுமதியான உபகரணங்களை கொள்ளையிட்டனர்,பாடசாலைகளின் கூரைகளை அகற்றினர்,பாதைகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் அழித்து சேதப்படுத்தினர்.ஆனால் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அவற்றை மீண்டும் புனரமைத்து கொடுக்கவில்லையா,மதவாச்சியிலிருந்த தலை மன்னார் வரையான புகையிரதப்பாதைகளி;ன் புனரமைப்புக்கள்,யாழிலிருந்து சங்குப்பிட்டி பாலம் ஊடாக குறுகிய நேரத்தில் மன்னார் ஊடாக கொழும்புக்குமான நவின பாதைகள் போன்றவற்றை எமது அரசாங்கமே செய்து வருகின்றது.
இத போன்ற எத்தனை வசதிகளை வடக்கில் வாழும் மக்களுக்கு இனக,மதம்,மொழி,பிரதேசம் கடந்து ஜனாதிபதி தலை;கிமையிலான அரசு மேற்கொண்டுவருகின்றது.குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் அரசாங்கம் பெறும் கடன்கள் என்பனவற்றில் 85 சதவீதம் வடக்கிலேயே செலவு செய்யப்படுகின்றது.
ஆனால் வடக்கில் உள்ள சில அரசியல் வாதிகள் மக்களின் இரத்தத்தை சூடேற்றி,இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து,மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முயலுகின்றனர்.இந்த அரசியல் வாதிகளின் பிள்ளைகள் இங்கிலாந்திலும்,ஏனைய நாடுகளிலும் கல்வி பயிலுகின்றனர்.தேர்தல் ஒன்று வந்துவிட்டால் தமது பிரசன்னத்தை செய்வதுடன்,வாரத்திற்கு ஒரு முறை இங்கு வரும் அரசியல் வாதிகளாகவே இருக்கின்றனர்.இவர்களின் இந்த முயற்சிகள் ஒரு போதும் பலனளிக்காது என்பதை தெளிவாக கூறிக் கொள்ளவிரும்பகின்றேன்.
வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய நாம் நடவடிக்கையெடுக்கும் போது,சில சர்வதேச சக்திகள் அழுத்தங்களை கொடுக்கின்றன. அதற்கு புதிய வரை விலக்கணங்களை மீள்குடியேற்றத்தை தடுக்க பாரக்கின்றனர்.இவர்கள் எதை செய்தாலும் இந்த நாட்டிற்காக தம்மை அரப்பணம் செய்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் முன்னெடுக்கப்படும்.
இந்த நாட்டில் சமாதானம் ஏற்படக் கூடாது என்பதில் சர்வதேச சக்திகள் முனைப்புடன் செயற்பட்டன.இன்றும் அவர்களது நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கின்றனர்.இதனை குழப்புவதற்கு எந்த வல்லரசு முனைந்த போதும் அதற்கு ஒரு போதும் எமது ஜனாதிபதி தலைமையிலான அரசு இடமளிக்காது என்பதை அந்த சக்திகளுக்கு சொல்ல வைக்க விரும்பகின்றேன்.
இனம்,மதம்,மொழி,கடந்து அனைத்து மக்களுக்கும் வன்னி மாவட்டத்திலும்,ஏனைய பிரதேசங்களிலும் மக்கள் பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் முன்மாதிரி மிக்க தலைமைத்துவத்ததை வடக்கிலிருக்கின்ற அரசியல் தலைமைகள் கற்றுக கொள்ள வேண்டும். மீள்குடியேற்ற அமைச்சராக அவர் இருந்த போது ஆற்றிய பணிகள் இன்றும் நினைவுக் கூறக் கூடியது.
இலங்கைக்கு.பாகிஸ்தான் ஆற்றிவரும் உதவிகள் நன்றி கூறத்தக்கது.முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்கள்,முஸ்லிம்கள் என்று பாராது தேவையான கிணறுகளை அமைக்க உதவி செய்துள்ளமை அத்துடன் இங்கு தேவையுணர்ந்து புன்னியமிக்க பணிக்காக நிதி வழங்கியமைக்கு இலங்கை அர நன்றி கூறுகின்றது என்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறினார்.
Post a Comment