Header Ads



முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசும் பயோபாப் மரம்



 (முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)

      'பயோபாப்' இதற்கு தலைகீழ் மரம் எனும் பெயரும் உண்டு. இது வரண்ட பிரதேசத்திற்குரிய ஒரு தாவரமாகும். இதன் அடிப்பகுதி 100000   லீ நீரைச்சேமிக்கின்றது. இதனால் மிகவும் விரிவடைந்து பெருத்துகானப்படுகிறது. இதன் இலை,காய்கள்,பூக்கள் என்பன உனவுக்காகவும், மருந்து தயரிப்பதுக்கும், குதிரை, ஒட்டகங்கள் போன்றவ்றின் உணவுக்காகவும் பயனபடுத்தப்படுகிறது.

      இதன் பட்டைகளைப் பிளிவதன் மூலம் பெருமளவு சுத்தமான நீரையும் பெற்றுக்கொள்ளலாம்.சில ஆபிரிக்க நாடுகளில் இம்மரம் குடையப்பட்டு வீடாகவும்,மலசல கூடமாகவும்,அலுவலமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது . உதாரணம் சம்பியா

இம்மரத்தின் விஞ்ஞானப் பெயர் 'அடான் சொனியா டிஜிடாடா' இதன் தாயகம் மேற்காபிரிக்காவில் உள்ள செனிகல் ஆகும். இதன் மலர் இரவிலே மலரும். இம்மரத்தின் பழத்தில் அதிகம் விட்டமின் உண்டு. இதன் பட்டையிலுள்ள நார் மூலம் கயிறுகள் திரிக்கப்படுகின்றன. உதாரணமாக இம்மரத்தின் சுற்றளவு 9 m உம், உயரம் 18 m உம் ஆகும்.மாறாக மன்னாரின் பள்ளிமுனையில் உள்ள மரம்- 19.5m சுற்றளவும்,7.5 m உயரமும் கொண்டு கானப்படுகிறது.

இம் மரங்களின் சாதரண வயது 300-400 ஆண்டுகள் ஆகும். மன்னாரில் உள்ள மரத்தின் வயது 750-800 எனக்கண்டு அறியப்பட்டுள்ளது. சேர் ஜேம்ஸ் எமர்சன் டெனன்ட் எனும் ஆங்கில யாத்திரீகர் கி.பி. 1860ல் பல பயோபாப்  மரங்களை மன்னாரில் தான் கண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார் 

ஆபிரிக்க நாடுகளில் இருந்தே அரேபிய வியாபாரிகள் தமது குதிகைள், ஒட்டகங்கள் போன்றவற்றிற்கு உணவுக்காக தாம் சென்றடைந்த நாடுகளில் இவற்றை உருவாக்கி உள்ளனர். அவ்வடிப்படயில் எமது நாட்டிலும் அரேபியர்களால் கொண்டு வரப்பட்ட பெருக்கு மரங்கள் ஏறத்தாழ 40 இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது. அதிலும் மிகவும் பெரிய ,800 வருடங்கள் பழைமையான பெருக்கு மரம் மன்னார் பள்ளி முனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இது வரையில் கண்டுபிடிககப்படாத ஒரு சிறு பெருக்கு மரம் முசலிப்பிரதேசத்தின் சவேரியார் புரத்தில் கபூர் சேமன் அவர்களின் தென்னந் தோட்டத்திற்கு செல்லும் வீதியின் கிழக்கில் அமைந்துள்ளது.இதனைப் பாதுகாக்க முசலிப் பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான தகவல் ஏற்கனவே, பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக்கின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இப்பிரதேசம் ,முத்துக்குளித்தல்,யானை பிடித்தல் போன்ற வற்ற்pல் பிரசித்தி பெற்று இருந்ததனால், அரேபியர் வருகையும்,காயல் பட்டின இந்திய முஸ்லிம் வருகையும் அதிகமாக இருந்துள்ளன,ஆரம்பகால முஸ்லிம் குடியேற்றங்கள் சிலாபத்துறை,அரிப்பு,குதிரைமலை போன்றவற்றுடன் தொடர்பு பட்டதாக இருந்து உள்ளது இது தெடர்பாக மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டும்.






1 comment:

  1. mannaril ulla maraththinai nan neradiyaha parththulean.unmai

    ReplyDelete

Powered by Blogger.