எம்பிலிப்பிட்டியவில் முஸ்லிம் சகோதரர்கள் மீது பொதுபல சேனா தாக்குதல்
(23-12-2012) ந் திகதி எம்பிலிப்பிட்டிய நகரத்தில் பொது பல சேனா தீவிரவாத அமைப்பினரால் துண்டு பிரசுரமொன்று பகிரப்பட்டுள்ளது. அதன் பிறகு எம்பிலிப்பிட்டிய போலிஸ் நிலையத்திற்கு அருகில் வியாபாரம் செய்துகொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் துண்டு பிரசுரம் பகிரப்பட்ட இரு நபர்களால் மிகமோசமாக தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்கிய நபர்களை பக்கத்திலிருந்தவர்கள் பிடிக்க முயன்றாலும் அவர்கள் ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர் .தாக்கப்பட்ட இருவரும் போலிஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக வேண்டி தொடர்ந்து காத்திருந்தாலும் இதுவரை புகாரை படிவதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொள்ளவில்லை என்றும் போலீசார் இவர்களின் புகாரை பதிவதை புறக்கணிக்கின்றார்கள் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
ஏ எம் எம் முசம்மில் . ( நன்றி பாஸ்ட் ரீடர்)
Post a Comment