யாழ்ப்பாணத்தின் பெரிய கடை சந்தை குறித்து ஆராய்வு - டக்ளஸ், சுபியான், ரமீஸ் பங்கேற்பு (படங்கள்)
யாழ்ப்பாணத்தின் பெரிய கடை சந்தை உட்புற பகுதியில் புதிய கடைத்தொகுதி மற்றும் துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.
மருத்துவமனை வீதியும், காங்கேசன்துறை வீதியும் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள மேற்படி சந்தைப் பகுதிக்கு அமைச்சர் 25-12-2012 விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது அங்கு புதிய கடைத்தொகுதி மற்றும் துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைப்பது தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டதுடன் அப்பகுதியில் சட்டத்திட்டங்களுக்கு ஏதுவாக அமையாத கட்டிடங்கள் வர்த்தக நிலையங்கள் விஸ்தரிப்புகள் மற்றும் அப்பகுதியின் சுத்தம் சுகாதாரம் தொடர்பிலும் அமைச்சர் கவனஞ் செலுத்தினார்.
இதனிடையே வேம்படிச்சந்திப் பகுதியில் யாழ் மாநக சபையால் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கடைத்தொகுதிகயையும் அமைச்சர் பார்வையிட்டதுடன் அது தொடர்பிலும் துறைசார்ந்தேரிடம் கேட்டறிந்து கொண்டார். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் பிரணவநாதன், பிரதி முதல்வர் ரமீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Post a Comment