இரட்டை பிள்ளைகளில் ஒருவர் வாகன விபத்தில் வபாத்
(tm) கேகாலை,நாரங்கல்ல முஸ்லிம் மகாவித்தியாலய முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் விபத்தில் மரணமானார்.
பாடசாலைகளின் விடுமுறை தினமான இன்று பாடசாலையை விட்டு வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நாரங்கல்ல முஸ்லிம் மகாவித்தியாலய முதலாம் ஆண்டு மாணவனாகிய முஹமட் ஹஸன் என்பவரே மரணமானார். பாடசாலையில் விட்டுவீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே அவ்வீதியிலுள்ள பாதசாரியின் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்த வீதியால் வேகமாக வந்த ரயில்வே திணைக்கள பார ஊர்தியே மாணவன் மீது மோதியுள்ளது. விபத்தில் சிக்குண்ட அந்த மாணவன் அதேயிடத்தில் மரணமானார். இந்த மாணவன் இரட்டைப் பிள்ளையில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Innalillahi wainna ilaihirajioon
ReplyDelete