அரசாங்க கலண்டரில் பௌர்ணமி விடுமுறை இல்லையாம் - சீறுகிறது பொதுபல சேனா
அரசாங்க கலண்டரில் பௌத்த மதம் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு, பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டு வருந்த போதிலும், 2013ம் ஆண்டுக்கான அரச கலண்டரில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.
பௌத்த மதத்தவர்களுக்கு முக்கியமான தினமான பௌர்ணமி தினத்தை வர்த்தக விடுமுறையாக அறிவிக்காமை கண்டிக்கப்பட வேண்டியது என பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தேனியே நத்ததேரர் குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டுக்கான கலண்டரில் பௌர்ணமி தினத்தை பொது வர்த்தக விடுமுறையாக உடனடியாக அறிவிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நத்தார் பண்டிகை, புனித நோன்பு பண்டிகை, தைப்பொங்கல், போன்ற ஏனைய சமயத்தவர்களின் முக்கிய தினங்கள் பொது வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் பெரும்பான்மையாக வாழும் பௌத்த மக்களின் முக்கிய தினமான பௌர்ணமி பொது வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment