இனவெறியன் நரேந்திரமோடிக்கு விசா இல்லை - அமெரிக்க சொல்கிறது
குஜராத் கலவரத்தை தொடர்ந்து முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. தங்கள் நாட்டுக்கு வர தடைவிதித்து விசா வழங்க மறுத்தது.
இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது,
அமெரிக்க எம்.பி.க்கள் எழுதிய கடிதம் எங்களுக்கு கிடைத்தது. நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற கொள்கையில் மாற்றம் இல்லை. அதே சமயம் குஜராத் மாநிலத்துடனான வர்த்தக உறவு, முதலீடு, பல்கலைக்கழகங்கள் அளவிலான தொடர்புகள் தொடரும். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்து விட்டதா என்ற கேள்வியை இந்திய அரசிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment