Header Ads



ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமை துரதிஷ்டமானது - செந்தில்


(இக்பால் அலி)

மலையகத்தில் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக தமிழ் முஸ்லிம்களுக்கிடையே சில முரண்பாடுகள் தோன்றினாலும்  தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மையினமாக வாழும் தமிழ் முஸ்லிம்கள் ஒன்றைனந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு எற்பட்டுள்ளதாக என ஊவா மாகாண தோட்ட உட்கடடமைப்பு இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

பதுளை மகளீர் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கட்டிட நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக ஊவா மாகாண தோட்ட உட்கடடமைப்பு இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் செந்தில் தொண்டமான் பாடசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை 9-12-12 அன்று விஜயம் மேற்கொண்ட பேது மலையக முஸ்லிம் மாநாட்டுக்கான அமைப்பின் தலைவர் செய்யத் முஹமட் தலைமையில் பாடசாலையின் முற்றத்தில் நடைபெற்ற கூடத்தில் அமைச்சர் செந்தில் தொண்டமான் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகயில்,

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஊவா மாகாண சபயில் ஒரு அரசியல் பிரதிநிதித்துவம் கூட இல்லாமற் இருப்பது பெரும் துரதிருஷ்டமான நிலையே காணப்படுகின்றன. எனினும் இக்குறையைப் போக்க  என்னால் இயலுமான முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளேன். முஸ்லிம் அன்பர்களுக்காக என்னுடைய கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும். சனி, ஞாயிறு தினங்களில் கூட என்னை அமைச்சிக்களில் சந்திக்கலாம்.  முஸ்லிம்களுடைய விவகாரங்கள் தொடர்பாக  இணைப்புச் செயலாளர் ஒருவரைக் கூட நான் நியமித்துள்ளேன். அவர் ஊடாக தங்கள் தேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சமீபத்தில் புதுளையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக அதிபர்களுக்கான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். அதன் போது அங்கு வருகை தந்த அதிபர்களின் சிபார்சிகளின் படி தெரிவு செய்யப்பட்ட  15 பாடசாலைகளுக்கு ஐம்பதாயிரும் ரூபா விகிதம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ன. இதன் மூலம் பாடசாலைகளில் அத்தியசியத் தேவையாகக் காணக் கூடிய  தளபாடங்கள் கதிரை மேசை திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  அதேவேளை இந்த மகளீர் கல்லூக்கு 2013 ஆம் ஆண்டு என்னுடைய பன்முகப்படுத்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து  மூன்று இலட்சம் ஒதுக்கீ செய்யத் தயாராக உள்ளதாக என்று அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்தார்.

அந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய பதுளை முஸ்லிம் மாநாட்டு அமைப்பின் இணைச் செயலாளர் எ, எம். எம். முஸம்மில் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று தேசிய ரீதியில் சிறுபான்மையினருக்கு  பல அழுத்தங்கள் பிரயோகிக்கக் கூடிய கால கட்டத்தில் சில முஸ்லிம் தலைமைத்துவங்கள் பொறுப்பற்ற தமது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. அரசு 13 அரசியல் திருத்த சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என  அரசியல் சில தலைவர்கள் முன் வைத்துள்ள கருத்துக்களுக்கு முண்டியடித்துக் கொண்டு அதற்கு ஆதரவாகச் செயற்படுவதைப் பார்க்கின்றோம். அதேபோன்று  பாராளுமன்றத்தில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை உச்சரித்தால் அடுத்த ஜன்மத்தில் அரவது குடும்பத்தில் பிறப்பதற்கு புண்ணியம் கிடைக்கு எனத் தாஜா பண்ணும் அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்று தமது பதவியை இராஜனமாச் செய்து விட்டுஉடனடியாக மாகாண சபைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்த ஊவா மாகாண உட்கட்டமைப்பு இளைஞர் விவகார விளையாட்டுத்தறை அமைச்ர் செந்தில் தொண்டமான்   இந்நாட்டில் ஆளும் தரப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலமிருந்த போதிலும் தன்னுடைய துணிகரமான போராட்டத்தை நடத்தி அரசியல் மேலிடங்களிருந்து அவரது இராஜனாமாவை வாபஸ் பெறுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டும் பொழுதும் தமது போராட்டத்தில் உறுதியாக இருந்து மேலும்  கூடுதலாக 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுடன் தம் அமைச்சுக்கு மேலதிகமாக இரு வாகனங்களையும் பெற்றுக் கொண்டு  வெற்றியுடன் இராஜினாமாவை வாபஸ் பெற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்.

முஸ்லிம் அமைச்சர் அரசாங்கத்தின் சலுகைகளைஉரிமைகளை  பெற்றுக் கொள்ளத் தெரியாமல் திண்டாடுகின்றார்கள் இந்த சிறிய சம்பத்வதைப் பார்த்தாவது பாடம் கற்க வேண்டும் என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.








No comments

Powered by Blogger.