தேசிய விவகாரங்களில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமை குறித்து சிங்கள சமூகம் கவலை
இலங்கையிலுள்ள 50 தோதல் தொகுதிகளில் முஸ்லிம்கள் தீர்மான சக்தியாக விளங்குகிற போதிலும் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம் சமூகம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நல்குவதில்லையென்ற அதிருப்தி சிங்கள சமூகத்தில் மேலோங்கி வருதாக சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தெரிவித்தார்.
இதுகுறித்து யாழ் முஸ்லிம் இணையத்திற்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் ஒருபக்கம் தொடரும் நிலையில் மறுபக்கம் சிங்கள சமூகத்திலுள்ள புத்தஜீவிகள் மற்றும் தாராள போக்குள்ளவர்களிடம் முஸ்லிம் சமூகம் பற்றிய கவலையும் அதிகரித்துள்ளது.
அதாவது தேசிய சிக்கல்கள் அல்லது நெருக்கடிகளின் போது முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்வதில்லை அல்லது அதுபற்றி ஆர்வமற்று காணப்படுகிறார்கள் என்று பொதுவான கருத்து காணப்படுகிறது. முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளவில்லையா..? என்றுகூட சிங்கள் புத்தஜீவிகள் பகிரங்கமாக கேள்வியெழுப்புகிறார்கள்.
உதாரணமாக க.பொ.த. உயர்தர மாணவர்களின் இசட் புள்ளி விவகாரம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள விவகாரம், பிரதம நீதியரசர் மீதான நம்பிக்கையில்லா பிரேணை உள்ளிட்ட விவகாரங்களில் முழு நாடும் மூழ்கியிருந்தபோது முஸ்லிம் சமூகமோ அதில் குறிப்பிடத்தக்க கவனத்தை செலுத்தியிருக்கவில்லை. முஸ்லிம் ஊடகங்களும் இவ்விடயத்தில் மென்மையான போக்கை கையாண்டன. இதனால் மேற்குறித்த தேசிய விவகாரங்கள் முஸ்லிம் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்துவில்லை.
இதனால் முஸ்லிம் சமூகம் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளவில்லை அல்லது அவர்கள் தமது நியாயமான போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்யவில்லை என்ற உணர்வு சிங்கள சமூகத்திலுள்ள ஒரு தரப்பினரிடம் மேலோங்கியுள்ளது. இந்நிலை முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்து சிங்கள சமூகத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் அவசியமாகிறது. இவ்வாறான அணுகுமுறை முஸ்லிம் சமூகத்திற்கு பயன்களை பெற்றுத்தரும். முஸ்லிம் சமூகம் குறித்து சந்தேகங்களையும் நீக்குவதற்கு இது உதவும்.
எனவே முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் சார்பு ஊடகங்களும் தேசிய நெருக்கடிகள், மற்றும் நாட்டில் எழும் நியாயமான கோரிக்கைகள் குறித்தும் ஆர்வம் செலுத்தவேண்டும். இதன்போது சிங்கள சமூகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களும் தம்முடன் இணைந்துள்ளனர் என்ற உணர்வு சிங்கள சமூகத்திடம் குறிப்பாக கல்விகற்ற சிங்களவர்களிடம் உருவாகும். இதன்போது முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கு சிங்கள இனவாதிகளிடமிருந்து நெருக்குவாரங்கள் குறைவதற்கும் காரணமாக அமையும் எனவும் என்.எம்.அமீன் மேலும் தெரிவித்தார்.
திரு. அமீன் அவர்களே .
ReplyDeleteசிங்கள சமுகத்தில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் தாரள போக்குடடவர்கள் என்று நீங்கள் இங்கு சுட்டிக்காட்டியவர்கள் தான் முதல் தர இனவாதிகள். இலங்கை நாடு எதிர்நோக்கியே தேசிய பிரச்சனைகளுக்கும் சர்வதேச பிரச்சினைகளுக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஆற்றிய அளப்பெரிய பங்களிப்பை இவர்கள் மூடி மறைப்பதற்காகவும் இலங்கை வாழ் முஸ்லிம்களையும் சர்ச்சைக்குள்ளாக்கி ஓரம்கட்ட எடுக்கும் பலபக்க முயற்சியில் இதுவுமொன்று. இசட் புள்ளி விவகாரம், விரிவுரையாளர் சம்பள விவகாரம், நீதியரசர் விவகாரம் இதுவெல்லாம் அரசாங்கத்தின் அரசியல் இயலாமை அல்லது வரம்பு மீறிய ஆளுகை,
முஸ்லிம் ஊடகங்களும், நிறுவனங்களும் நியாயத்தின் பால் நிற்கவேண்டுமே தவிர அரச சார்பு ஊதுகுழலாக மாறாக்கூடாது.
சர்வதேசம் இலங்கை அரசைப்பார்த்து புன்னகைக்கிறது...
ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம் இறங்கசொன்னால் முடவனுக்கு கோபம் ........
ReplyDeleteஇது போன்ற தேசிய நீரோட்டத்தில் இணைந்தால் அரசுக்கு எதிராக செயற்படுகின்றோம் என்று சொல்லுவது... மூடிக்கொண்டு இருந்தால் தேசிய நீரோட்டத்தில் பங்களிக்கவில்லை என்று சொல்வது... என்ன கொடுமைடா ஆண்டவா?
தேசிய விவகாரங்கள் என்றால் கிலோ என்ன விலை என கேட்போரை பாராளுமன்றத்தில் வைத்துக்கொண்டிருக்கிறோம் அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூட முடியாத புத்திஜீவிகள்தான் முஸ்லிம்களிடம் உள்ளனர்.
ReplyDelete