டிசம்பர் மாதம் அழிவுக்குரியதா..? சம்பவங்கள் அடையாளங்களா..??
(ஜெஸ்மி எம். மூஸா)
டிசம்பர் மாதம் ஆரம்பமானதுமே இலங்கையின் கரையோர மக்கள் ஒரு வித பயத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகுவது 2004.12.26 ஆம் திகதிய சுனாமிக்கு பின்னர் தொடர் கதையாகிவிட்டது. காரணம் அவர்களை நம்பவைப்பது போல் நடந்தேறுகின்ற சம்பவங்களும் அதனைத் தெடரும் வதந்திகளுமாகும். கிராமப்புற மக்ககளே இதனால் பெரிதும் ஆட்பட்டுவிடுகின்றனர்.
கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் காலநிலை ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியிலேயே அதிகரித்த மழையும் கட்டுக்கடங்காத வெள்ளங்களும் ஏற்படுவதுடன் வங்காள விரிகுடாவை மையப்படுத்திய தாழ் அமுக்க எச்சரிக்கைகள் பலவும் விடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன.
2004 – டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி ஏற்படுவதற்கு ஒரிரு தினங்களுக்கு முதல் நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்த மழையினால் வெள்ளம் ஏற்பட்டதுடன் தாழ்அமுக்க எச்சரிக்கையும் பலமடைந்தது. சூறாவளியை எதிர்பார்த்திருந்த வேளையிலேயே ஆயிரக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான உடமைகளையும் காவு கொண்ட சுனாமி ஏற்பட்டது.
சுமாத்திராவில் ஏற்பட்ட சில நிலஅதிர்வு கடல்கேளாக மாறி சுனாமி எனப் பெயரெடுக்கும் வரை இச் சொல்லை இலங்கை மக்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை. ஐப்பான் மக்களுக்கு பெரிதும் பழக்கப்பட்ட இச் சொல் கி.பி 03 நூற்றாண்டளவில் கடற்கோள் என பயன்படுத்தப்பட்ட்டிருந்த போதிலும் , சினிமாக்களில் உச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் டிசம்பர் 26 ம் திகதிக்குப் பின்னர் தான் அப்பெயரை இலங்கையர் யதார்த்தமாக அறிந்தனர்.
நில நடுக்கத்தினால் ஏற்படும் தாழ்நில அதிர்வு கடலடிகளை தாக்கும் போது ஏற்படும் உடனடி நிகழ்வே சுனாமியல்லாமல் அது முன் கூட்டிய திட்டமிடலின் வெளிப்பாடல்ல. 2004 ஆம் சுனாமி ஏற்படுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முதல் அதிசய கால்களுடன் கோழி ,மனித முகத்துடன் ஆடு, கரைவலையில் கோடிக்கணக்கான மீன்கள் போன்ற சம்பவங்களை வைத்துக் கொண்டு தொடராக இது போன்ற நிகழ்வுகள் டிசம்பரிலும் அதனையொட்டியும் நிகழும் போது அதனை சுனாமிக்கான அல்லது அழிவுக்கான அடையாளங்களாக கிராம மக்கள் நம்பி வருவதுடன் மற்றவர்களுடன் பரிமாறியும் கொள்கின்றனர்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை அடுத்து சீராக இருந்த இலங்கையின் காலநிலையில் தளம்பலொன்று ஏற்பட்டதை ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
குறிப்பிட்ட காலங்களில் மழை இன்னும் சில காலங்களில் வெப்பம் என்று திட்டமிட்ட காலநிலைக் காலமாக இருந்த பாடத்திட்ட காலநிலை இன்று செல்லுபடியற்றதாகிவிட்டது.
இது இவ்வாறிருக்க இடைக்கிடை நடைபெறும் சில அதிசயங்களும் காலமாற்றங்களும் சுனாமிக்கான அடையாளங்களாகக் கொள்ளப்படுவது எவ்வகையில் சாத்தியமாகலாம்?
கடல்வற்றுப் பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்து நீர்ப்பரவல் கரையோரங்களை ஆக்கிரமிப்பதும் காலநிலை மாற்றங்களுக்கு ,டுகொடுக்காமல் சில உயிரினங்கள் தனது இருப்பிடங்களை வலிந்து கொண்டு டி இடமாற்றுவதும் இயல்பு. இவையல்லாம் சுனாமிக்கான அடையாளங்களா? என்றபால் இல்லை. இப்படியான சம்பவங்கள் 2004 டிசமபருக்கு முன்னரும் நிகழ்ந்த்துதான் உள்ளன.அப்போதெல்லாம் இது பெரிது படுத்தப்படவில்லை.
குனாமிக்குப் பின்னர் நடைபெற்ற சிறு சிறு கம்பவற்களால் கூட அனர்த்தம் ஏற்பட போகின்றதோ? எனப் எனப் பயந்துகொள்ளும் மக்களாகவே பாதிக்கப்பட்ட சமூகத்தில் பலர் காணப்படுகின்றனர். சூடுபட்ட மக்கள் என்பதால் எவ்வளவு எடுத்துக் கூறியும் அப்பயத்தை ஒழிக்க முடியாத சூழலே காணப்படுகிறது. சுனாமி தினமாக டிசம்பர் 26 இல் மீண்டும் வரும் என்றாலும் நம்புவதற்கு தயாராக உள்ளவர்களையும் காண முடிகின்றது.
இவ் ஆண்டு டிசம்பர் ஆரம்பமானது முதல் பல்வேறு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 02 ஆம் திகதி அமேரிக்க ஏஞ்சல் பகுதியில் இடம்பெற்ற 5.8 றிச்டர்ட் பதிவான நில நடுக்கம் முதல் இந்துனேசிய சவும் கிறிக் பகுதியில் 155 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட 7.2 றிச்ட்டர் பூமியதிர்வு , ஜெமினிட்ஸ் என்ற விண்கற்களின் தொகுதி பூமிக்கு அண்மையில் பயணிப்பதால் அதன் எரி கற்கள் பீமியில் விழலாம் என நாஸா தெரிவித்தமையினை அடுத்து இலங்கையிலும் அதன் ஆதிக்கம் இருக்கலாம் என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் விடுத்த எதிர்வு கூறல்கள் என இவை ஒரு புறமிருக்க கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த்தாக்க் கூறப்படும் மாயன் இனம் வானவியல்,பூமி சாஸ்திரம் ,கணிதம் உள்ளிட்ட பல துறைகளில் கைதேர்ந்தவர்கள் என்றும் கி.மு 3113 இல் தொடங்கிய அவர்களின் நாட்காட்டி கி.பி 2012 இல் டிசம்பர் 21 இல் முடிவுக்கு வருகின்றது. இதனால் உலகம் அழியப்போகின்றது என்ற அறிவிப்பு உறியான மத வாரிகளை பாதிக்காவிடினும் அந்த நம்பிக்கை இந்த மாத்தை அடியொட்டியே எதிர்பார்க்கப்பட்டிருந்தமையால் இவையல்லாம் இயற்கை அனர்த்தம் ஒன்றிற்கான முன்னேற்பாடா? என மக்களை சந்தேகம் கொள்ள வைத்த்து.
இவ்வாறான விடயங்களுக்கு அப்பால் மாத்தறை கம்புறுபிட்டிய மீன் மழை திஸ்ஸமஹாராம இறால் மழை,அட்டாளைச்சேனை கப்பலடி கடல் மற்றும் மட்டக்களப்பு கல்லடியில் பாம்புகளின் வருகை, அம்பாரை மாவட்டத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டும் இதுவரை திட்டமிட் ஆய்வறிக்கையாக்க் கூறப்படாத அதிர்வொலிகள் என எலடலாமே சம்பவங்களாக நோக்கப்பட்ட போதிலும் இம் மாத்த்திற்குள் நடந்தேறி முடிவடைந்துள்ளமையினால் இவற்றையெல்லாம் சுனாமிக்கான முன் ஏற்பாடுகளாக கொள்கின்ற கிராமப்புற மக்கள் அச்சத்தின் உச்சியில் உள்ளனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்த்த்தின் பின்னர் இலங்கையின் வானழலை மற்றும் அனர்த்த மையங்களும் விழிப்படைந்து கொண்டன.
இயற்கையனர்த்தங்களை அறிவிக்கும் 52 முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 20 கோபுரங்கள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளன. ஊடகங்கள் இது தொடர்பில் அறிவித்தல்களை விழிப்புணர்வுகளையும் செய்துவருகின்றன. செயடதிகளுக்கான ஊடக வலயமைப்பிற்குள் மக்கள் மயப்படுத்தும் உள்ளனர். இவையல்லாம் இருக்கும் போது இத் தினத்தில் அல்லது இந்தக் காலத்திற்குள் சுனாமி வருமாம் விண்கற்கள் மிக அண்மையில் வந்து விட்டதாம்., அந்தக் கிராமத்தில் மாடு பெண் குழந்தையைப் பெற்றதாம் அது இயற்கையழிவு விரைவில் வரும் என்றதாம் இந்தப்பத்திரிகையில் இந்த்த் தளத்தில் சுனாமி டிசம்பர் இத்தனையாம் திகதியே வரும் என்று கிடக்கிறதாம் என்றெல்லாம் ஆதார்பூர்வமற்ற லிஷம்ம் பிரச்சாரங்களைப் பரப்பி கிராம மக்களை பீதியில் ஆழ்த்தும் காரியங்களில் சிலர் ஈடுபட்டும் வருகின்றனர்.
எது எவ்வாறிருந்தும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுவிக்கப்படும் எச்சரிக்கைகளை நூறு வீதம் நம்ப முடியாது என்ற கருத்தை நாம் நிராகரிக்க முடியாது. ஆனால் இது தொடர்பில் வெளியாகும் வதந்திகளை நம்பாமலும் அதனை மற்றவர்களுக்கப் பரப்பாமலும் இருப்பது எமது ஒவ்வாருவர் மீதுள்ள சமுதாயக் கடமையாகும்.
இயற்கையினையும் அதன் சீற்றத்தையும் படைப்பாளனைத்தவிர வேறு எவராலும் திட்டமிட்டுக் கணிக்க முடியாது என்பது தான் சமய நம்பிக்கை வாதிகளின் வாதம்.
Post a Comment