புத்தளத்தில் தேசிய சுகாதார வாரம் (படங்கள்)
(அபூ நாதில்)
இன்று ஆரம்பமாகும் தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு புத்தளம் தள வைத்தியசாலையில் ஆரம்ப வைபவம் இடம் பெற்றது. முதல் நாளான இன்று மக்கள் - ஊழியர்கள் தொடர்பு நிகழ்வு புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில் ஆரம்பமாகியது.
புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ. பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் என். டீ. எம். தாஹிர், புத்தளம் பிரதேச செயலாளர் எம். ஆர். எம். மலிக், பொலிஸ் மற்றும் முப்படை உயர் அதிகாரிகள், அரச துறை உயர் அதிகாரிகள், வைத்தியர்கள் உட்பட் பலரும் இந்த நிகழ்விழ் கலந்து கொண்டனர்.
Post a Comment