Header Ads



புதிய மாணவர் அனுமதியின் போது பணம் கேட்டால் அறியத்தாருங்கள் - ஆளுனர் சந்திரசிறி


(அபூ தனா)

 தரம் 1 க்கு புதிய மாணவர்ளை சேர்க்கும் போது பாடசாலைகள் எவ்வித பண அறவீடுகளையோ,அன்பளிப்புக்களையோ பெற முடியாது. அப்படி மீறி யாராவது கோரினால் தனக்கு அறியத்தருமாறு வடமாகாண ஆளுனர் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒரு கண்டிப்பான அறிவித்தலை கிழக்குமாகாண ஆளுநர் அவர்களும் வெளியிட வேண்டும் என கிழக்கு மாகாண மக்கள் எதிர்பரர்க்கின்றனர்.

கல்வி என்பது ஒரு பிள்ளையின் அடிப்படை உரிமை. அதைத்தடை செய்வது போலவே சட்டவிரோத பண அறவீடு அமைந்துள்ளது. கல்வி அமைச்சு சுற்றுநிருபங்கள் மூலம் இதைத்தடை செய்திருந்த போதும் பண அறவீடு தொடர்கிறது. 'பூனைக்கு யார் மணிகட்டுவது' என்ற தோரணையில் பெற்றோர் காட்டிக்கொடுக்க முன்வராமை பணம் அறவிடும் முதலைகளுக்கு ஒரு பெரும் வாய்ப்பாக உள்ளது. 

சட்ட விரோத பண அறவீட்டைக்கண்டால், பொலிசாருக்கோ, சிறுவர் அதிகாரசபைக்கோ, அண்மையிலுள்ள நீதி மன்றத்திற்கோ, கல்வி அமைச்சுக்கோ, இலஞ்ச ஊழல் ஆணைக்குளுவுக்கோ,  ட்ரான்ஸ் பெரன்சி இன்டர்நெசனலுக்கோ, மனித உரிமை ஆணைககுளுவுக்கோ அறிவிக்கமுடியும். 

குறிப்பு: பாடசாலை அபிவிருத்திக்கு பணம் தேவையென்றால் வேறுவழிகளில் அதைப்பெற்றுக்கொள்ளலாம். ஒரு சாதாரண ஏழைப் பெற்றோரை ஒருகணம் நினைத்துப்பாருங்கள். அண்மையில் இலஞ்ச ஊழல ஆணைக்குளுவின் வலையில் சிக்கிய் இரு அதிகாரிகளுக்கு குடியுரிமை 7 வருடங்களுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது

1 comment:

  1. Good Ithai Enaiya Maahaana Aalunarhalum Seithaal Nantraaha irukkume?

    ReplyDelete

Powered by Blogger.