மலையக பகுதிகளில் இயற்கை அனர்த்தம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
(ஜே.எம்.ஹபீஸ்)
நாட்டில் பெய்து வரும் கடும் மழைகாரணமாக மலையகத்தில் பல பகுதிகளிம் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
தெல்தெனிய வேண்டருவ என்ற இடத்தில் வீட்டுச் சுவர் ஒன்று உடைந்து விழுந்ததில் ஒரு கைக்குழந்தை மரணமடைச்துள்ளதுடன் அயலவர்களது முயற்சியால் இன்னும் இரு குழந்தைகள் மீட்கப்பட்டு உடதும்பறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மலைநாட்டு புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளது. ஒஹிய- இந்தல்கஸ்தென்ன பகுதியில் புகையிரதம் தடம் புரண்டதால் அப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் கொழும்பு – பதுளை பிரதான போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹப்புதலை, பெரனகல பிரதேசத்தில் மண்சரிவு காரண மாக தடைப்பட்டுள்ளது.
நக்கிள்ஸ் மரைக்குச் சென்ற 67 பேர் சிக்குண்டு பின்னர் மீட்கப்பட்டனர். இதில் 12 சிறுவர்களும் அடங்குவர். தெல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததால் இவர்கள் வெளிவரமுடியாது சிக்குண்டிருந்தனர்.
மாத்தலை வஸ்கமுவ வனப்பூங்காவிற்குச் சென்ற கண்டி பூஜாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 10 பேரும் இன்னும் சிலரும் சிக்குண்டுள்ளனர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை அங்கு சென்றவர்கன் இன்னும் திரும்பவில்லை என உறவினர்கன் தெரிவிக்கின்றனர்.
பேராதனை ஹந்தானை மலைக்குச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் பெருந் தொகையானோர் வெளியேற முடியாது சிக்குண்டு பின்னர் கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
மாத்தலை மாவட்டத்தில் கம்மடுவ பிரதேசத்தில் மரம் ஒன்று வேன் மீத விழுந்ததில் அதிற் பயணம் செய்த மூவர் மரணமடைந்தும் 7 பேர் சிகிட்சைக்காக இரத்தோட்டை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாத்தலை கும்பல்கஹவௌ பகுதியில் வெல்லம் காரணமாக 27 பரீட்வாத்திகள் சேற்று கணித பாடத்திற்குத் தோற்றவில்லை.
கண்டி- மஹஜயங்கனை பிரதான வீதியில் 18 வளைவுகள் உள்ள இடத்தில் 4ம் 7ம் வளைவுகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment