சுனாமியில் மரணித்தவர்களுக்காக பிரார்த்திப்போம்..!
(சௌஜீர் ஏ. முகைடீன்)
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி சுனாமி என்னும் ஆழிப்பேரலை இலங்கையின் கரையோர வாழ் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் காவுகொண்டு சென்று இன்றுடன் 8 வருடங்கள் ஆகின்றன. உடனிருந்த உடன் பிப்புக்களையும், ஒட்டி உறவாடிய உறவுகளையும், சுற்றம் சூழ்ந்தருந்த அயலவரையும் இழந்த துயரினை நினைவு கூர்ந்து சமய அனுஸ்டானங்களில் ஈடுபடுகின்ற இச்சந்தர்ப்பத்தில் ஆழிப்பேலையினால் உயிரிழந்த அத்தனை ஆத்மாக்களும் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பேம் என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சுமாத்திரா தீவில் கடலுக்கு அடியில் 9.1 றிச்டர் அளவில் ஏற்பட்ட புவி நடுக்கத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சுனாமிப் பேரலையினால் 1000க் கணக்கான உயிர்கள் மாண்டு போயின கோடிக் கணக்கான சொத்துக்கள் அழிந்துபோயின. எம்மக்கள் செய்வதறியாது நிர்க்கதியாகி நின்றனர். தற்போது ஒருவிதமாக பொருலாதார ரீதியாக ஏற்பட்ட இழப்புக்களில் இருந்து மீண்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் உயிர் இழப்புக்களை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.
இயற்கையின் சீற்றத்தினை கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் மனிதனுக்கில்லை. கடல் அருகே வாழ்விடம் இருந்தும் ஆழிப்பேரலையினை காணதவர்களும் இருக்கிறார்கள், கடற்சீற்றத்தில் சிக்குண்டு தப்பியவர்களும் இருக்கிறார்கள், கடலுக்கும், இருக்கும் பிரதேசத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லாதவர்கள் விதியின் அழைப்பினை ஏற்று கடல் அருகே சென்று மண்டவர்களும் இருக்கிறார்கள். “ஒவ்வொரு உயிரும் மரணத்தை அனுபவித்தே தீர வேண்டும்” என்ற அருல்மறை வசனத்தை ஞாபகப்படுத்திப் பார்க்கின்றபோது எவர்களுக்கெல்லாம் அன்று அழைப்பு வந்த்தோ அவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது எவர்களுக்கெல்லாம் இன்னும் ஆயுள் இருக்கின்றதோ அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.
இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் என்றோ ஒருநாள் இறப்பு உண்டு என்ற நியதியினை நினைவு கூர்ந்தவர்களாக சாந்தியடைவதோடு. உயிர் நீத்த அத்தனை பேரின் மறுமை வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காக பிராத்திப்போமாக.
Post a Comment