Header Ads



சகோதரி றிசானாவுக்கு பொது மன்னிப்பு..?


(gtn) இலங்கைப் பணிப் பெண் ரிசானா நாபீக்கிற்கு பொது மன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நாபீக்கிற்கு, சவூதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சிசுவொன்றை கொலை செய்ததாக நாபிக்கிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சவூதி முடிக்குரிய இளவசரர் சல்மன் பின் அப்துல் அசீஸ் அல் சாட் அறிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்டுள்ள மன்னருக்கு ஆசி வேண்டி இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2007ம் ஆண்டு முதல் சவூதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டள்ள ரிசானா அநேகமாக விடுதலை செய்யப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அரச பொதுமன்னிப்பு வழங்கப்பட்டோர் பட்டியலில் ரிசானாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என இலங்கை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ரிசானாவை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை  இலங்கை அதிகாரிகள் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

3 comments:

  1. நோய் வாய்ப்பட்டுள்ள மன்னருக்கு இறை ஆசி வேண்டி பல மரண தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். வல்ல அல்லாஹ் மன்னர் அப்துல்லாஹ்வுக்கு பூரண சுகத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்தருள நாமும் பிரார்த்திக்கின்றோம். அல்லாஹ்வின் இந்த ஏற்பாட்டின் மூலமாவது நமது சகோதரி ரிஸானாவுக்கு விடுதலை கிடைக்கவும் அல்லாஹ்வை இறைஞ்சுகின்றோம். அதே வேளை நமது ஜனாதிபதியும் இது குறித்து மேற்கொண்ட இரண்டு முயற்சிகளையும் பாராட்ட வேண்டும். அதாவது அவர் மன்னர் அப்துல்லாஹ்வுக்கு அனுப்பிய கருணை மனுக் கடிதத்தினால் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் மூலமாவது மரணமடைந்த குழந்தையின் பெற்றோர் விஷேடமாக தாய் மனமிரங்கி ரிஸானாவை மன்னிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்து குவைத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் நமது ஜனாதிபதி ஸஊதியின் முடிக்குரிய இளவரசர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸுக்கு இது குறித்து கடிதம் கொடுத்திருக்கின்றார். அதற்காக அவர் நமது அட்டோர்னி ஜெனரலை அங்கு அனுப்பி வைக்கும்படி கோரியிருந்தார். பின்னர் தற்போது இப்படியான ஒரு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அபலை ரிஸானாவுக்கு விடுதலை கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமே. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். - எம். ஒஸன் ஸலாம் - தோஹா

    ReplyDelete
  2. எல்லாப்புகளும் அல்லாஹ்வுக்கே,அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  3. எல்லாப்புகளும் அல்லாஹ்வுக்கே.அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.