Header Ads



உலமா சபை, முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் அரசியல்வாதிகள் இணைந்து செயற்பட உறுதி


இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் அண்மைய காலங்களில் சிங்கள கடும்போக்காளர்கள் மேற்கொண்டுவரும் நெருக்கடிகளை தடுப்பதற்காக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆகிய முத்தரப்பினரும் இணைந்து செயற்பட உறுதி பூண்டுள்ளதாக நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டிய மிக அவசியமாக காலகட்டம் இதுவேயாகும். இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மிகமோசான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த பிரச்சாரங்கள் அப்பாவி சிங்கள மக்களிடையே தாக்கம் செலுத்தக்கூடியன. எனவே இதுகுறித்து முஸ்லிம் சமூகம் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சவால்களை வெற்றிகொள்ள நமக்கு ஒற்றுமையே பிரதானமானது. எனவேதான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டுச்சேர்ந்து செயற்பட உறுதிபூண்டுள்ளோம். 

முஸ்லிம் சமூகம் புத்தியுடன் கூடிய நிதானமான செயற்பாட்டில் ஈடுபடவேண்டிய தருணமிது. அவசப்பட்டு முழு சமூகத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் காரியங்களில் ஈடுபடக்கூடாது. உலமா சபையின் வழிகாட்டல், முஸ்லிம் கவுன்சிலின் அறிவூட்டல்கள் குறித்து நம்மவர்கள் அவதானம் செலுத்தவேண்டும்.

அந்தவகையில் முஸ்லிம்களுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள முஸ்லிம் சமூகுத்தின் முதன்மைபெறும் 3 தரப்பினரும் ஒன்றுபட்டிருப்பது ஆரோக்கியமானது. எதிர்வரும் நாட்களில் சிங்கள சமூகத்துடனான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும், அவர்களிடம் முஸ்லிம்கள் குறித்தும் இஸ்லாம் பற்றியும் காணப்படும் சந்தேகங்களை வெற்றிகொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுமேனவும் அமீன் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.