மனதை தொட்டு சொல்லுங்கள்..!
(ஓமானிலிருந்து டாக்டர் மஹ்பூப் ஏ. மஜீட்)
அன்றும் (22.12.12) குடும்பத்தாருடன் வழமை போல் மாலை 5 மணிஅளவில் SKYPE ல் Chat செய்ய நினைத்து sign-in ஆகும் போது Mobile phone அலறுகிறது. Screen ல் ‘MASEERAH HOSPITAL’ என்று display ஆக.. அடப்பாவி section (சிசேரியன்) ஒண்ட set ஆக்கிட்டங்கப்பா என்று நினைத்து on செய்ய... மறு பக்கம் பதட்டமான குரலில் 'Doctor please come immediately to the ETU... we are having a child with RTA (Road Traffic Accident)... Very Urgent Please என்று முடியவில்லை அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட.. உடனடியாக wash எடுத்து கொண்டு Hospital ETU வை ஓட்டமும் நடையுமாக அடைகிறேன். ETU Bed No 1 இல் இரத்த வெள்ளத்தில் ஓர் 4 வயது மதிக்கத்தக்க மழலை ஒரு Nurse Canulae வுக்காக try பண்ண .. மற்றொரு Nurse IV line Prepare செய்ய... மற்றும் இரு தாதியர் Bleeding ஐ arrest பண்ண dressing செய்ய... நான் நிலைமையை ஓரளவு புரிந்து கொண்டவனாக ETU Doctor இடம் what happened? என்றதற்கு
Doctor; we just got an admission of 4 year old child with RTA knocked down by a Car, baby is in shock & the Brain is exposed. please give us a hand to save his life …
Gloves ஐ மாட்டியவனாக குழந்தை அருகில் செல்கிறேன் உள்ளம் உருகி விடுகிறது. என் குழந்தை வயதை ஒத்த ஆண் மழலை frontal head (நெற்றி) பகுதி நொறுங்கிய நிலையில் (Crush Injury) விரைந்து canulae வை சரி செய்து Blood ஒன்றை order செய்கிறேன் Surgeon என்னை நோக்கி Dr.Mahbub please put the ET tube as he is having Risk of Aspiration என்று சொல்ல, மூக்கு மற்றும் வாய் வழியே வெளியேறும் blood ஐ sucker மூலம் suck செய்தவனாக Sedation மற்றும் Muscle relaxant ஆகியவற்றை inject செய்தபின் Intubate செய்து Ambu செய்கிறேன் ..
ஓர் தாய் ஓடோடி என்னிடம் விரைந்து அரபியில் எதோ இரந்து கேட்க நானோ சுதாகரித்து கொண்டு மற்ற Doctor ஐ பார்க்கிறேன்
'she is begging to save her kid ' என்றார் அவர்.
உண்மையில் இந்நிலைமையில் ஒரு தாயின் ஏக்கத்தை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. தன் உயிரை எடுத்தாவது குழந்தையின் உயிரை காப்பாற்றுமாறு கூறுவதாக ஒரு Nurse சொல்ல இதயம் இன்னும் கனக்கிறது.
நான் Surgeon இடம் What is your plan ? என்று கேட்க…
We have to do our best.I have already asked our Administration to make arrangements to transfer the patient to a hospital where ICU & Neuro surgeon is available.
INSA ALLAH every thing will be OK,
Dr.Mahbub please keep the patient in the ICU & connect him with the ventilator.
OK Dr.Yusuf என்று சொன்னவாறு patient உடன் ICU விரைகிறேன். patient ஐ ventilator இல் connect செய்து வெளியே வருகிறேன் .சுப்ஹானல்லாஹ். மெய் சிலிர்த்து போகிறது .
ICU வெளி விறாந்தையில்அக் குழந்தையின் குடும்பத்தார் ஆணும் பெண்ணும் வேறு வேறு சப்fபாஹ அல்லாஹ்விடம் சுஜூதில் அழுது பிரார்த்திக்கின்றனர். மாஷாஅல்லாஹ்… இதுவல்லவா இஸ்லாம்.
அப்பொழுது என் வைத்தியாசாலை Administrative officer
'We have arranged a Helicopter to transfer the patient to SUR Hospital for ICU Management & Neurologist openion'. என்று சொல்லி முடியவில்லை.Airforce officers- portable bed உடன் ICU நுழைந்து transfer கொண்டு செல்ல குழந்தையை Ready செய்யுமாறு கேட்க,
சட சட வென்று தேவையான drugs ஐயும் instruments ஐயும் எடுத்துக்கொண்டு ஓர் பெண் உதவி தாதியுடன் hospital அருகில் உள்ள Airforce Base இற்குள் நுழைய ஓர் Helicopter புறப்பட ஆயத்தமாக இருக்கிறது. குழந்தை உடனடியாக Helicopter இற்கு மாற்றபடுகிறது, portable ventilator ஐயும் blood pack ஐயும் குழந்தையுடன் இணைக்கப்பட விமானம் தரை ஏறுகிறது.(விமான இரைச்சல் காரணமாக எம்முள் தொடர்புகள் சைகை மூலமும் எழுத்து மூலமும் நடைபெறுகிறது. விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் Pilot officer ஓர் card ஐ என்னிடம் நீட்டுகிறார். அதில் இப்படி எழுதி இருந்தது.
‘Doctor; we are trying to fly over 7000 feets high.. is it ok for the baby? ' நானும் எதோ எல்லாம் தெரிந்தவன் போல் OK சொல்கிறேன். .சரியாக 30 நிமிடங்களில் Helicopter SUR Hospital ன் main enterance அருகில் தரை இறங்குகிறது. என்னால் நம்ப முடியவில்லை 3 வைத்தியர்களும், 4 தாதியரும் எம் வருகைக்காக காத்து நிற்கின்றனர். சற்றும் தாமதமின்றி குழந்தை ICU வில் admit ஆகி ventilator இல் connect செய்யப்படுகிறது. Doctor,please arrange an USS abdomen and CT please என்று consultant ன் குரல். வழக்கமான handover procedures முடித்து வெற்றி களிப்புடன் Helicopter இல் ஏற ready ஆகிறேன்.என்னுடன் வந்த பெண் தாதி 'Doctor, Is this your first visit in a Helicopter? என்று கேட்க
நானும் Yes… for you?? என்று நானும் கேட்க
Yes … yes .. this is my first experience in air & with you என்று ஓர் புன்முறுவல். Aircraft Jacket ஐயும் hearing proof ஐயும் அணிந்து கொண்டு விமானத்தில் ஏறி உட்கார விமானம் புறப்படுகிறது. முன்னால் 2 Pilot பின்னால் நானும் என் உதவி தாதியும் … 10 நிமிடம் போயிருக்கும். என் அருகில் இருந்த தாதி என்னை பார்த்தவாறு ஓர் காகிதத்தில் ஏதோ எழுதுகிறார். பின் அதை வாசிக்குமாறு சைகை செய்து என்னிடம் நீட்ட என்னுள் ஒராயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்க மடலை திறக்கிறேன் .
Dear Doctor,
I just forgot to say you that the mother of this child had lost her eldest daughter 2 years back by a Car Accident. please Pray ALLAH for this Child …
சத்தியமாய் சொல்கிறேன் கண்கள் கசிந்து விட்டன. நான் Helicopter ஐ விட்டு இறங்கும் வரை துஆ செய்கிறேன். சரி இவை அனைத்தும் ஆடி ஓயும் போது இரு வினாக்கள் என்னுள் அலை மோதின …
1. தயவு செய்து யாரையும் குறிப்பிட்டு குறை கூறுவதாக எண்ண வேண்டாம் எம் நாட்டில் hospital ஒன்றில் இப்படி transfer செல்வதென்றால் Authorize பண்ணுவது முதல் ambulance Driver spot ற்கு வரும் வரை நாம் எத்தனை மணித்தியாலயங்களை வீண் விரயம் செய்கிறோம். உண்மையில் மனதை தொட்டு சொல்லுங்கள் (என்னையும் சேர்த்து) Transfer செல்ல, வீடு சென்று, சாப்பிட்டு, wash எடுத்து, உடுப்பு pack செய்யாமல் எத்தனை transfer சென்றிருக்கின்றோம். இதை விடுங்கள் இதை விட ஒரு படி மேலாக ஒரு Emergency transfer இருந்தும் எதாவது இன்னொரு case வரட்டும் அதையும் சேர்த்தால் ஒரேயடியாக செல்லலாம் என்று நாம் இழந்த உயிர்கள்தான் எத்தனை.. ?
2. சிறு சிறு சில்லறை பிரச்சினைகளுக்காக எம் சகோதரர்களுக்கிடைலேயே கத்தி என்றும் துப்பாக்கி தோட்டா என்றும் உயிர் பலி கொள்ளும் நம் சமூகம் எங்கே ? ... ஓர் சாதாரண மீன் வியாபாரியின் மகனின் உயிரை காக்க உலங்குவானூர்தி உடனடியாக தரும் இவர்கள் எங்கே?
இவைகளுக்கு அடிப்படை பொருளாதார பின்னடைவா?
மனிதாபிமான பின்னடைவா ??
இல்லை இரண்டுமா ???
உலகம் எங்கே இருக்கின்றது...? நாம் எங்கே இருக்கின்றோம்...??
(எதுவும் கற்பனை அல்ல)
மனதை உருக்கிவிட்ட சம்பவம், அல்லாஹ் எல்லோரையும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். அந்தக் குழந்தையின் முடிவு என்னவாயிற்று எனக் குறிப்பிடப்படவில்லை.
ReplyDeleteதொழில்கள் சம்பாத்தியத்திற்கான வழி என்று மாத்திரம் நோக்கப்படாமல் சேவை மனப்பாண்மையோடு நோக்கப்பட்டால் மாத்திரமே இப்படியான நல்ல செயற்பாடுகளைக் காணமுடியும்.
'உமக்காக நீர் எதனை விரும்புகின்றீரோ அதனையே உம் சகோதரருக்காகவும் நீர் விரும்பும் வரை நீர் உண்மையான முஃமினாக முடியாது' என்ற நபி மொழியும் இங்கு நோக்கத்தக்கது.
குறித்த சம்பவத்தில் பங்கேற்ற அத்தனை ஊழியர்களும் அந்தப் பாலகனை தமது சொந்த மகனாக நினைத்து செயற்பட்டிருக்கின்றனர் என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது.
வைத்தியர் அவர்கள் முடிவில் இதற்கான அடிப்படை என்னவென்ற வினாவோடு முடித்திருக்கின்றார். நிச்சயமாக மனிதாபிமான வரட்சியே இதற்குக் காரணம் என்பதில் ஐயமில்லை. பணம் ஒரு பிரச்சினையல்ல. இவ்விடத்தில் இன்னொரு நபி மொழியும் குறிப்பிடத்தக்கது. ஒரு முறை நபி ஸல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
' நிச்சயமாக நீங்கள் உங்கள் பணத்தைக் கொண்டு மக்களைத் திருப்திப் படுத்த முடியாது. ஆனால் மிருதுவான உங்கள் பேச்சு, நற்குணங்கள் போன்றவற்றைக் கொண்டு மக்களைத் திருப்திப் படுத்தமுடியும்'
இந்நபி மொழி நம் நாட்டு, குறிப்பாக எம் அதிகாரிகளுக்குப் பல வழிகாட்டல்களை உணர்த்தி நிற்கின்றது. சிந்திக்கின்ற உள்ளங்களைத்தான் காணவில்லை!!!
டொக்டர் குழந்தையின் தற்போதைய நிலை என்ன ????????
ReplyDeleteஅல்லாஹ் காப்பாதியிருப்பான் என நம்புகிறேன் !!!!
kankalai vellathalum ullaththai allah vin sinthanaiyalum moolhadiththu vittathu.
ReplyDeletesubahanallah