இலங்கையை நேசித்த டொனி கிரேக்
கையடக்கத் தொலைப்பேசியில் கிடைக்கப்பெற்ற அந்த குறுசெய்திசெய்தி என்னை ஆழ்ந்த கவலை உட்படுத்தியது. அக்குறுசெய்தியில் இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னால் தலைவரும் பிரபல கிரிக்கட் வர்ணணையாளருமான டொனி கிரேக் புற்று நோய் காரணமாக தனது 66 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை வாசித்து முடித்ததும் ஒரு கணம் பழைய கறுப்பு, வெள்ளை நினைவலைகள் உள்ளத்தில் ஊசலாடின. டொனி கிரேக் இன் ஈர்ப்புமிக்க, அனைவரையும் வசீகரிக்கும், கம்பீரமான குரல் வளத்தையும், தனக்கேயுரிய பாணியிலான அவரது வர்ணிப்பு வித்தையையும், இலகு ஆங்கில வசனக் கோர்வைகளிலான பேச்சுப் போக்கையும் செவிசாய்ப்பதற்கென்றே பல கிரிக்கட் ஆட்டங்களை கண்டுகளித்த ஞாபகங்கள் கண்முன்னே நகர்ந்து சென்றன. இவரது மறைவு கிரிக்கட் வர்ணணை துறைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்றே கூறலாம். அந்தளவிற்கு அவர் இத்துறைக்கு பங்களிப்பு வழங்கியுள்ளார். அதற்கு அவரது வர்ணணைக்கு அடிமை பட்டிருக்கும் ஆயிரக்கனக்கான ரசிகர்கள் வெள்ளமே சான்று. இவர் விட்டுச்சென்ற வெற்றிடததை நிரப்பும் தகுதி படைத்த ஒருவராவது என் சிந்தைக்கு எட்டவில்லை. இன்றைய தினம் கிரிக்கட் உலகின் கறுப்பு தினம்.
எல்லோரும் கூறுவது போல டிசம்பர் இழப்பின் மாதம் என்ற கூற்று இன்னொரு முறை ஊர்ஐதமாகி விட்டது. டொனி கிரேக் இன் ரசிகர்கள் சார்பில் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மறைவிற்கு முன்புள்ள சில மாதங்கள்.
ஆகஸ்ட்- செப்தம்பர் மாதம் பாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகள் டுபாயில் மோதிய சர்வதேச ஒரு நாள் தொடரின் போது டொனி கிரேக் சுகயீனமுற்றார். அதனால் அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சை செய்யப்பட்டது.
ஆக்டோபர் மாதம் இலங்கையில் இடம்பெற்ற 20-20 உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் டொனி கிரேக் மருத்துவ சோதனைக்கு சென்ற போது அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இக்காலப்பகுதியில் இவர் Channel Nine Commentary Team இல் இணைந்துக் கொள்ளவில்லை. டோனி கிரேக் கூறினார்: 'இது நல்லதல்ல, உண்மையில் நான் நுரையரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இப்போது அவர்களால் என்ன செய்ய முடியும்' (“It’s not Good. The truth is I’ve got lung cancer. Now It’s a case of what they dan do”)
டோனி கிரேக் 29 ஆம் திகதி காலை வீட்டிலிருக்கும் வேளை மாரடைப்பு ஏற்பட 3.45 PM (NZT) மணிக்கு உயிரிழந்தார்.
டொனி கிரேக் மறைவு குறித்து கிரிக்கட் உலக பிரசித்தங்களின் அனுதாப வரிகளில் சில..........
Glenn McGrath இன்று என் சிந்தனைகள் டொனி கிரேயின் குடும்பத்துடன்....
இங்கிலாந்து அணி வீரர்; Matt Prior எனது கதா நாயகர்களில் ஒருவரான டொனி கிரேக் இன் மறைவை என்னால் நம்பமுடியவில்லை. கிரிக்கடிலே உன்னதமான ஓர் குரல். ஆதனை இப்போது இழந்து விட்டோம்.
பாகிஸ்தான் அணியின் பயிற்றுவப்பாளர் Dav Whatmore: ஓர் சிறந்த மனிதர். அவரை இழக்கிறோம்.
Sanath Jayasooriya: : டொனி கிரேயின் மறைவை கேள்விப்பட்டதும் நான் அதிர்ந்து போனேன். ஆவர் ஓர் சிறந்த மனிதர். இலங்கை நாட்டை நேசிக்கின்ற, எங்கள் வெற்றிக்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் குரல் கொடுக்கும் அன்புக்குறிய நபரை இழக்கிறோம். நீங்கள் எப்போதும் எம்மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
Kumar Sangakkara: டொனி கிரேக் மறைவுச் செய்தியை கேள்விப்பட்டதும் மிகவும் கவலையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். டொனி இலங்கையர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரை முழு கிரிக்கட் உலகும் இழக்கிறது.
டொனி கிரேக் அதிகமான சந்தர்ப்பங்களில் அவரது வர்ணணையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட ஓருவர். இது அவர் இலங்கை மீதும், இலங்கை அணி மீதும் கொண்டுள்ள அன்பே காரணம். இலங்கை அணியை உலகுக்கு தனது வர்ணணையின் மூலம் அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும். '“Captain Cool, Master Blaster, Run Machine, Little Kalu” என்று இலங்கை அணியை உலகுக்கு அறிமுகம் செய்தார்.
Tony Greig was the person who believed in the talent of Srilankan cricketers even before the Srilankan cricketers believe in themselves.
ReplyDelete