அரசியல் அதிகாரத்தை அழகு பார்க்காமல் மக்களின் நன்மைக்காக எவருடனும் ஒத்துழைக்க தயார்
அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அழகு பார்க்காமல் மக்களின் நன்மைக்காக எவருடனும் ஒத்துழைத்துச் செயற்பட தயாராகவுள்ளேன். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
நிந்தவூர் பாத்திமா கிறீச் முன்பள்ளி பாடசாலையின் 39வது வருடாந்த விழா அண்மையில் நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார். மாகாணசபை உறுப்பினா ஆரிப் சமசுடீன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்றைக்கு 39 வருடங்களை நிறைவு செய்திருக்கும் பாத்திமா கிறீச் எனும் பெயர் கொண்ட முன்பள்ளியானது பெயருக்கேற்ற நல்ல அர்த்தத்துடன் சேiவாயற்றி வருகிறது.
39 வருடங்களாக இப்பாடசாலையின் பணிப்பாளரான ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளரான அல் ஹாஜ் அஹமட் துP எவ்வித தங்கு தடையுமி;ன்றி தொடர்ச்சியாக இந்த நிறுவனத்தினை இயக்கி வருகின்றமை ஆச்சரியப்படகூடிய ஒரு செயற்பாடாக மட்டுமல்லாமல் நல்தோர் உதாரணமாகவும் விளங்குகிறது. இத்தகையைவர்களின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கதாகும். நமது சமூகத்தில் உள்ளதோர் குறைபாடு பாராட்டப்பட வேண்டியவர்கள் பாராட்டப்படுவதில்லையென்றார்.
இம்முன்பள்ளி மாணவர்கள் எவ்வளவு மகிழ்ச்சிகரமாக தமது முன்பள்ளிக் கல்வியினை ஆரம்பிக்கின்றார்களோ அல்லது ஆரம்பிக்கப்படுகின்றதோ அதே போன்று அவர்களின் ஆரம்ப நிலை கல்வி இடைநிலை மற்றும் உயர்நிலை கல்வி தொடர் தொடர்ச்சியாக மகிழ்சிகரமாக அமைய வேண்டுமென்பதே எமது விருப்பமாகும். அரசியல் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கும் எமக்கு இம்மாணவர்களின் எதிர்காலம் அமானிதமாக உள்ளது. மாணவர்களின் கல்விக்காக மாத்திரமின்றி மக்களின் நன்மைக்காக எவருடனும் ஒத்துழைத்துச் செயற்பட தயாராகவுள்ளேன.; அரசில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அழகு பார்க்க விரும்பவில்லை. அதனை மக்கள் சேவைக்காகவே பயன்படுத்த எண்ணிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.
ஒரு கல்வி நிறுவனம் சிறந்து விளங்குவதற்கு திறமையான அதிபரும் பிள்ளைகளுக்கு அறிவை ஊட்ட வேண்டும் என்ற சித்தம் கொண்ட ஆசிரியர்களும் அவசியமாகும். திறமையான அதிபர்கள் இல்லாமல் எவ்வளவு கட்டிடங்களைக் கட்டிய போதிலும் ஆய்வு கூடங்களை நிறுவிய போதிலும் மற்றும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த போதிலும் எவ்வித பிரயோசனமும் இல்லை.
எமது பிரதேச பாடசாலைகளுக்கு திறமையான அதிபர்களை அரசியல் பாரபட்சம் பாராது தமக்கும் தமது கட்சிக்கும் விசுவாசமானவர் என்று கருதாது திறமைக்கு முன்னுரிமை வழங்கி நியமிப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும் பிரதேச கல்வியின் முன்னெற்றத்துக்கு ஒளி விளக்காக அமையுமென அவர் குறிப்பிட்டார்.
Post a Comment