ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து கணக்கெடுப்பு
(tu) நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களின் மரணத்திற்கும், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் புலன்பெயர்வுக்கும் காரணமான கலவரம் உருவான மியான்மர் ராக்கேன் மாநிலத்தில், அரசு முஸ்லிம்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது.
புத்த தீவிரவாதிகள் கட்டவிழ்த்து விட்ட கலவரத்தின் காயம் ஆறும் முன்னரே, மியான்மர் எமிக்ரேசன் துறை முஸ்லிம்களின் குடியுரிமை ஆவணங்கள் தொடர்பான கணக்கெடுப்பை துவக்கியுள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் ராக்கேன் மாநிலத்தில் உள்ள தொலை தூர கிராமங்களில் மின்சாரம் கூட இல்லாத கூரை வீடுகளில் ஏறி இறங்கி அரசு அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்துவதை நேரில் கண்டதாக அசோசியேட் ப்ரஸ் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
பிறப்பு,பெற்றோர்களின் பெயர், பாட்டனார்களின் பிறப்பும், இறப்பும் உள்ளிட்ட விபரங்களை முஸ்லிம்களிடமிருந்து அரசு பிரதிநிதிகள் சேகரிக்கின்றனர். சிறப்பு அறிவிப்பு எதுவும் இன்றியே இம்மாதம் 8-ஆம் தேதி கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. குடியுரிமைக்காக அரசு அலுவலகங்களில் ஏறி, இறங்கி தளர்ந்துபோன ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமையை மறுப்பதற்கான தைன்ஸைன் அரசின் புதிய தந்திரம் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று தாய்லாந்தை மையமாக கொண்டு செயல்படும் மியான்மர் மனித உரிமை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறியவர்கள் என்று மியான்மர் அரசு கூறி வருகிறது. ஆனால்,நூற்றாண்டுகளுக்கு முன்பே மியான்மருக்கு முஸ்லிம்கள் வருகை தந்துவிட்டதாக ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தெரிவிக்கின்றன.
Post a Comment