உலகம் அழிவதை நம்பாத மாயன்கள்..! - வதந்திகளுக்கு முடிவு கட்டினர்...!!
மாயன்களின் நாட்காட்டியை குறிப்பிட்டு 21.12.2012 அன்று உலகம் அழிந்து விடும் என பலரும் பதைபதைத்து நிற்க அதனைப் பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் மாயன் இனத்தவர்கள்.
மாயன் நாட்காட்டி 21.12.2012 அன்றுடன் முடிவதால், அன்றே உலகம் அழிந்து விடும் என மக்கள் கதை கட்டி வருகின்றனர். தெற்கு பிரான்ஸில் உள்ள கிராமத்தில் பல மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த கிராமம் உலகம் அழியும்போது அழியாது என கிளப்பி விடப்பட்டுள்ள ஒரு புரளியின் காரணமாக அங்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு நல்ல வியாபாரம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மெக்ஸிகோவில் உள்ள மாயா இனத்தினர் இது பற்றி எந்தவித கவலையும் இன்றி நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஏறத்தாழ 80,000 மாயா இனத்தவர்கள் உள்ளனர். மெக்ஸிகோவின் யுகடான் தீபகற்பப் பகுதியில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
உலகம் அழிவது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்ட இவர்கள், 06.06.06 அன்றும் இவ்வாறு உலகம் அழியும் என பலர் தெரிவித்ததையும் சுட்டிக் காட்டியுள்ளனர். inneram
Post a Comment