பாராளுமன்றத்தில் பலஸ்த்தீனத்திற்கு பாராட்டு
பலஸ்தீனம் தனி நாடாக ஐ.நா.வில் அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு நேற்று வெள்ளிக்கிழமை சபையில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உடையாற்றுகையிலேயே முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்லவும் பின்னர் ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. யான விஜித ஹேரத்தும் ஆளும் கட்சியின் சார்பில் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. யும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். vi
Post a Comment