பாபரி மஸ்ஜித்தை இடித்த இடத்திலேயே கோயிலை கட்டுவோம் - வெறியர்கள் முழக்கம்
(TU)
இறையில்லமும், இந்தியாவின் வரலாற்றுச் சின்னமுமான பாபரி மஸ்ஜித் பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் நேற்று நிறைவுற்றது. நேற்று டிசம்பர் 6 அன்று மக்களவை பாப்ரி மஸ்ஜித் தொடர்பான அமளியால் ஸ்தம்பித்தது. இதனைத் தொடர்ந்து மக்களவையை அவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
பாபரி மஸ்ஜிதை இடித்த சம்பவத்தை தொடர்ந்து அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையை அமல்படுத்தக்கோரி பல்வேறு கட்சியைச் சார்ந்த எம்.பிக்கள் மக்களவையில் கோரிக்கை விடுத்தனர். காலையில் மக்களவை துவங்கியவுடன் பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றும், நீதி கிடைக்கவில்லை எனவும் கூறி பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பியான ஷஃபீகுர் ரஹ்மான் பர்க் கறுப்புக்கொடியை காட்டினார். கறுப்புக்கொடி காட்டுவது அவை உறுப்பினர்களை அவமதிப்பதாகும் என்று கூறி கறுப்புக்கொடியை மாற்ற அவைத் தலைவர் மீரா குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஷஃபீக்கும், மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் எம்.பி அஸாஸுத்தீன் உவைஸியும் அவையில் நடுப்பகுதிக்குச் சென்று குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஷஃபீக்கை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று பா.ஜ.க, சிவசேனா உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் மஸ்ஜித் இடித்த இடத்திலேயே கோயிலை கட்டுவோம் என்று சங்க்பரிவார எம்.பிக்கள் திமிராக பேசினர்.
Post a Comment