Header Ads



அட்டாளைச்சேனை சந்தைக் கட்டட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு


(எம்.பைஷல் இஸ்மாயில்)

புறநெகும திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடி 60 இலட்சம் ரூபா நிதியில் அட்டாளைச்சேனை சந்தைக் கட்டட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (19.12.2012) புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இன்னாள் மாகாணசபை உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாத், அட்டாளைச்சேனை பிரதேசசபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், நிந்தவூர் ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் கே.எல்.நக்பர், றியா மசூர் சின்னலெப்பை, உதவித் தவிசாளர் ஏ.எல்.நபீல், உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஓல்டி.மனாப்,  ஆகியோர்களினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டன.





No comments

Powered by Blogger.