சொல்லித்தான் ஆகனும்..!
(ஜெஸீம்)
இன்று உலகம் அனைத்து துறைகளிலும் சிகரத்தை எட்டுக்கொணடிருக்கிறது. விண்ணை தொட்டுவிட்ட விஞ்ஞானம.. சிந்தையை விஞ்சிய தொழிநுட்பம்... உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஊடகம்...! இவ்வாறு அதன் எழுச்சியை எழுதிக்கொண்டே செல்லலாம். மேற்கத்தைய உலகின் எழுச்சி ஒரு புறமிருக்க அதன் மறுபக்கமான வீழ்ச்சியையும் அவசியம் குறிப்பிட வேண்யிருக்கிறது. வீழ்ச்சி எனும் போது முதலில் ஞாபகத்திற்கு வருவது ஒழுக்கவியல் வீழ்ச்சியே. இந்த ஒழுக்கவியல் வீழ்ச்சிக்கான மூல காரணியாக கருதப்படுவது ஆடைக்கலாச்சாரம் என்று கூறினால் தவறில்லை. மறைக்கப்படவேண்டிய அங்க அவயங்கள் வெளித்தெறியும் படியும், பிற ஆணின் உணர்ச்சியை உந்தும் வகையிலுமான இந்த ஆடைக்கலாச்சாரமே எல்லா விதமான வீழ்ச்சிக்கும் வித்தாகும்.
மேற்கத்தைய உலகின் வீழ்ச்சிக்கு வித்தாக அமைந்துள்ள ஆடைக்கலாச்சாரம் இன்று எம் முஸ்லிம் சமூகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றது. மேற்கத்தைய உலகின் சாரல் Fashion எனும் நாமம் கொண்டு மெல்ல மெல்ல எம்மில் ஊடுருவிக்கொண்ருக்கின்றன. விரும்பியோ வெறுத்தோ நாமும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. எம்சமூகத்தையும் இந்த ஒழுக்க வீழ்ச்சி தொற்றி விடுமோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. அதற்கு சில சம்பவங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.
சம்பவம்-01: (பல்கலைக்கழக வளாகத்தில்)
இன்று அதிகமான சகோதரிகள் இஸ்லாமிய ஆடைகளை அணிகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் அவ்ஆடைகள் இஸ்லாம் கூறும் முறைப்படி அமைந்துள்ளதா? என்று கேட்டுப்பார்த்தால விடைக்காணப்படவேண்டிய வினாவாக உள்ளது.
Fashion இன் தாக்கத்தால் ஹிஜாப், ஹபாயா அணிவதன் நோக்கம் மங்கிப்போய்க் கொண்டுருக்கின்றது. உடலின் அமைப்பை படம்பிடித்துக்காட்டும் விதத்திலானதும், ஆண்களின் பார்வையை ஈர்க்கும் வகையில் இறுக்கமான, வித விதமான வர்ணங்களிலும், Fashion களிலில் ஆடைகளை அணிந்து உலாவரும் காட்சியை கண்டும் கூறாமல் இருக்க முடியவில்லை. இவ்வாறான ஆடை கலாச்சாரத்தை யார் சொல்லித் தந்தது? தெரிந்து செய்கின்றார்களா? அல்லது தெரியாமல் செய்கின்றார்களா? என்று தெரியவில்லை.
ஹிஜாப், ஹபாயா அணிவதன் உயர் நோக்கம் அண்ணிய ஆண்களின் கெட்ட பார்வையை விட்டும் பாதுகாக்கும் கேடயமாக தொழிற்படுவது. அந்நோக்கம் இங்கு நிறைவேற்றப்படுகின்றதா.....? ஆதற்காகத்தான் இஸ்லாம் தளர்ந்த, இருக்கமில்லாத ஆடைகளை பெண்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் மாற்றுமத சகோதரர்கள் எமது முஸ்லிம் சகோதரிகளை அசிங்கமாக வர்ணிக்கும் போது எந்த முஸ்லிமால்தான் மௌனமாக இருக்க முடியும். Fashion வலையில் சிக்காத பெண்களாக மாறும் போதுதான் இஸ்லாத்தின் Fashion ஜ மனமுவந்து ஏற்க முடியும்.
சம்பவம்-02
கண்டி நகரில் மிகப்பிரசித்தமான சிங்கள மொழி மூலமான பெண்கள் பாடசாலையொள்றில் கடமைப்புரியும் ஓர் முஸ்லிம் ஆசிரியரை ஒரு தேவையின் நிமத்தம் சந்திக்க நேர்ந்தது. பேச்சின் நடுவே அவர் கூறினார்;, இப்பாடசாலையில் ஒரு பாடத்திற்கான ஆசிரியர் பதவி வெற்றிடமாக உள்ளது, உமக்கு தெரிந்த எவராவது இருக்கிறார்களா? என்று வினவினார், நானும் ஒரு சிலரை சுட்டுக்காட்டுனேன். அப்போது அவர் கூறினார்: இப்பாடசாலைக்கு ஆசிரியராக வருபவருக்கான முதல் நிபந்தனை அவர் ஹபாயா அணியக்கூடாது. பதிலாக என்னைப் போல் சாரிதான் அணிந்து வர வேண்டும் என்று பெருமையாக கூறினார்.
ஒரு முஸ்லிமாக இருந்து இருந்து கொண்டு அவர் இப்படி பேசியது ஆச்சரியமாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மார்க்கத்தை இழந்து பெற்றுக்கொள்ளும் எந்தவொரு விடயத்திலும் இறைத்திருப்தியை எதிர்ப்பார்க்க முடியாது. அது தூய எண்ணத்தில் செய்தாலும் சரியே...! என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டேன்.
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் மாத்திரமல்ல இதுபோன்ற பல சம்பவங்களை தொட்டுக்காட்ட முடியும். ஆனால், விரிவு அஞ்சி சுருக்கிக்கொள்கிறேன். எமது முஸ்லிம் சகோதரிகளின் இத்தகைய ஆடைக்கலாச்சாரப் போக்கு நாளடைவில் பாரிய ஒழுக்க வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேற்கத்தைய உலகு விழுந்திருக்கும் சாக்கடையில் எம் சமூகமும் விழுந்திடுமோ என்ற அச்சம் எழுகிறது. இஸ்லாமிய ஆடை அமைப்பு உம்மை ஷைத்தானிய பார்வையை விட்டு பாதுகாக்கக்கூடிய கேடயம். நாணத்தின் உறைவிடம். இவ்உயர் நோக்கத்தினை அற்ப உலகாயுத நோக்கத்திற்காக விற்றுவிடாதீர்கள்...
Dear brothers,
ReplyDeleteWearing hijab is fine, obligatory, however when it goes to the extreme of covering the face, how much safe is it for the community?
Case 1: Some girls from a leading girls school in Colombo were found in the company of their boy friends in a Hotel; they have come to school as usual covering their faces.
Case 2: Similar incident involving a girl from Kandy school leaving in a three wheeler with a male.
With many of our brothers working in Middle East and working away from home, their wives leaving home, with their identity covered leaves room for many unwanted social evils.
Therefore, since it is practically impossible to establish a community regulation asking ladies not go shopping alone or go to pick up the child form nursery in urgent situations, the next best solution would be have them attired appropriately hijab with face visible so their identity is not hidden.