Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது - புபுது ஜாகொட


நாட்டின் வங்குரோத்து நிலைமையை மூடிமறைக்கவே அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்தப்படுவதாக முன்னணி சோசலிச கட்சியின் பிரசாரச் செயலாளர் புபுது ஜாகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தோட்டத் தொழிலாளிகள், அரசாங்க ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் என்ற அனைத்து தரப்பினருக்கும் நன்மைகள் கிடைக்கவில்லை.

இவ்வாறான ஓர் நிலைமையில் எவ்வாறு ஆட்சி செய்வது. இனவாதம், பீதி அரசியல், அடக்குமுறை மற்றும் ஏமாற்று நடவடிக்கைகள் போன்றவற்றினால் மக்களை திசை திருப்ப முடியும்.

இதன் காரணமாகவே அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்துகின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் எதிராக இனவாத நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.