Header Ads



புளத்சிங்கள பகுதியில் ஜெலி போன்ற திரவ மழை - சிவப்பு மழையும் தொடருகிறது


நாட்டின் பல பகுதிகளில் சிகப்பு மழை பெய்த சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில்  புளத்சிங்கள கோவின்ன பகுதியில் ஜெலி போன்ற திரவத்துடன் கூடிய மழை பெய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அம்பலாங்கொட அளுத்வல பிரதேசத்தில் இன்று முற்பகல் பெய்த மழை சிவப்பு நிறத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இரத்தினபுரி, கொலன்னாவ - பனாமுர பிரதேசத்திலும் நேற்று மாலை சிவப்பு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்நிலையில், புலத்சிங்கள, கோவின்ன - பெல்பொலவத்த பிரதேசத்தில் பெய்த மழையின் பின்னர் வெள்ளை நிற பதார்த்தமொன்று படிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.