Header Ads



மருத்துவ துறையில் சாதனை படைத்துள்ள அட்டாளைச்சேனை



(எஸ்.எல். மன்சூர்)

அட்டாளைச்சேனையில் நவீன இயந்திரத்தின் ஊடாக கணனியினுடன் இணைந்த புத்தம்புதிய உடற்பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தெடர்பாக வைத்தியரான கே.எல். எம். நக்பர் கருத்து தெரிவிக்கையில்,,

உடலின் எப்பாகதிலும் காணப்படும் எவ்விதநோய்களையும் இனங்காண்பதற்கான நவீன இயந்திரத் தொகுதி ஒன்றினை வெளிநாட்டிலிருந்து தருவித்து இதன் ஊடாக அனைத்து நோய்களையும் சில நிமிடங்களில் கண்டறிந்து கொள்ளமுடியும். இலங்கையில் முதன்முதலாக இவ்வுபகரணம் பயன்படுத்தப்படும் ஒரே இடம் அட்டாளைச்சேனையிலாகும். என்று வைத்தியர் கே.எல். நக்பர் தெரிவித்தார்.

உண்மையில் ஒரேதடவையில் நமது உடம்பிலுள்ள அனைத்து நிகழ்வுகளையும் ஓரிரு நிமிடங்களில் கண்டறியும் இவ்வுபகரணத்தின் மூலம் ஒருமனிதனின் சாதாரண நிலையினையும், அவனின் உடம்பிலுள்ள நிகழ்வுகளையும் அதற்கான குறைநிறைகளையும் சுட்டிக்காட்டுவதுடன், இதற்கான பரிகாரத்தினையும் முன்வைக்கின்றமை சிறப்பானதாகும். அத்துடன் குறைந்த நேரத்தில் தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலான அனைத்துத் தொகுதிகளையும் துல்லியமாக கண்டறியும் நவீன இயந்திரத்தினை அறிமுகம் செய்திருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என மக்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த பலவருடங்களாக நாடுமுழுவதும் வைத்தியத்துறையில் புரட்சியை ஏற்படுத்திவரும் டாக்டர் கே.எல்.எம். நக்பரின் இந்த பெருமுயற்சியினால் குறைந்த செலவில் நிறைவான பலனைப் பெறுவதற்கு வழிசமைத்துள்ளார் என நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இவ்வைத்தியர் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற 5வது உலக ஆயுள்வேத மநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன், நவீன சிகிச்சைக்கான மருத்துவம் சம்பந்தமான ஆய்வறிக்கையையும் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



No comments

Powered by Blogger.