ஷியாக்களே...! 'எமது கெளரவத்தை காக்க எமக்கு உரிமை இருக்கிறது'
(Tn) ஈராக்கின் பெரும்பான்மை ஷியா அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் சுன்னி முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் துணைப்பிரதமரின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஈராக்கில் ஆயிரக்கணக்கான சுன்னி முஸ்லிம்கள் ஈராக்கிற்கான ஜோர்தான், சிரியா விநியோகப்பாதையை இடைமறித்து ஒருவார காலமாக பிரதமர் நூரி அல் மாலிக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஈராக் அரசு சுன்னி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக மாலிகி, ஈராக்கின் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் சிறுபான்மை சுன்னி முஸ்லிம் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை கடந்த 2011 இல் வெளியேறியபின் அங்கு ஷியா- சுன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான முறுகல் அதிகரித்தது. சுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்திய சதாம் ஹுஸைன் அரசு கவிழ்க்கப்பட்ட பின் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை ஷியா முஸ்லிம்கள், சுன்னி பிரிவினருக்கு எதிராக செயற்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “எமக்கு உங்களது உணவு தேவையில்லை. உங்களது தண்ணீர், மருந்து எதுவும் தேவையில்லை. எமது கெளரவத்தை காக்க எமக்க உரிமை இருக்கிறது” என ஆர்ப்பாட்டக்காரர் மத்தியில் ஒரு சுன்னி மதத்தலைவர் கோஷம் எழுப்பினார்.
யாஅல்லாஹ் உன்னை பொருந்திக்கொண்ட உனது அடியார்களை காப்பாற்றுவாயாக!!!
ReplyDelete