பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எந்தவித பலனும் கிடையாது - கபீர் ஹாசீம்
பல்கலைக்கழக கல்வித் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தனியார் மயப்படுத்தல் மோகத்தினால், பல்கலைக்கழகங்களின் கல்வித் தரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நாட்டுக்கு எந்தவிதமான பலனும் கிடையாது. பாடசாலை பாடவிதானம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவில்லை. உயர்கல்வித் துறையை தனியார் மயப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் லாப நோக்கத்தை முதனிலையாகக் கொண்டு செயற்படும் அவற்றின் ஊடாக சிறந்த தரத்தை எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய போன்ற நாடுகளில் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியானால் கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலகுவார் எனவும், இலங்கையின் கல்வி அமைச்சர் தம்மைத் தவிர ஏனைய அனைவரையும் குற்றம் சுமத்தி பிழைகளுக்கு நியாயம் கற்பித்து வருவதாகவும் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
Post a Comment