மக்கள் மனங்களில் நிறைந்த பொத்துவில் மர்ஹூம் எம்.பி.ஏ. அஸீஸ்
(அஸ்ரப். ஏ. சமத்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.பி.ஏ அஸீஸ் கடந்த 2012.11.05ந் திகதி இறையடி சேர்ந்தார். உயர் குடும்பத்தில் உதித்த இப்றாகீம் கண்டு முகைதீன்பாவாக்கும் லெவணா மறைக்கார் லைலா உம்மாவுக்கும் மகனாக 1947.01.19ஆம் திகதி பொத்துவில் மண்ணில் பிறந்தார். அவர் இன்னும் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு தனது பணியை மக்களுக்காக செய்துள்ளமை நாம் யாவரும் அறிந்த உண்மையாகும்.
அவர் எஹிலியகொட பாடசாலையில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றார். சிங்களத்தில் நன்கு தேர்ச்சி பெற்றதின் காரணமாக நாட்டிலுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள பெருந்தலைவர்களுடன் உறவை வளர்த்து பொத்துவில் மக்களுக்காக பல சேவைகளைச் செய்துள்ளார். குறிப்பாக 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செனட்டர் சோமரத்னவுடன் இணைந்து பொத்துவில் மண்னுக்கு மக்கள் வங்கியை பெற்றுக் கொடுத்தார். பொத்துவில் மண்ணில் 17வயது வாலிபராக இருக்கும்போது முதல் சமாதான நீதவளாக அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.
1979.06.10ஆம் திகதி கலந்தர் லெப்பை மரைக்கார் முஹம்மது மீராசாஹிபு (யுனியன் மனேஜர்) அவர்களின் புதல்வி ஐனுல் ஆரிபாவை திருமணம் செய்து மூன்று ஆண் குழந்தைகள், இரண்டு பெண்குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார். அவரது முத்த புதல்வர் ஏ.இர்சாத் அவர்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் கணக்காளராகவுள்ளார். இவருடைய புதல்வியின் கணவரான டாக்டர் எம்.எச்.பௌமி ஹசன் பிரபல சிறுபிள்ளை வைத்திய நிபுணராக கொழும்பு லேடி றிச்வே வைத்திய சாலையில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
1988ஆம் ஆண்டு மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து பொத்துவில் மண்ணில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை காலுன்றச் செய்து புதுயுகம் படைத்தார். 1988ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் போட்டியிட்டு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
1994ம் ஆண்டு மறைந்த தலைவர் எம்.எச்.எம்அஷ்ரப் அவர்களின் அமைச்சின் இணைப்பதிகாரியாக நியமனம் பெற்று பொத்துவில் மண் பொருளாதார வளம் பெற அரும்பாடுபட்டார். குறிப்பாக முஸ்லீம் தமிழ் சிங்கள ஆகிய அனைத்துப் பாடசாலைகளுக்கும் பெருந் திருத்த வேலைகளுக்காக பல இலட்சம் ருபாய் நிதியை ஒதுக்கி பாடசாலைகளின் புறக்கிருத்திய வளர்ச்சிக்கு உதவினார். குறிப்பாக பொத்துவில் மத்திய கல்லூரிக்கு பெருந்திருத்த வேலைகளுக்காக பல இலட்சம் ருபாய் நிதியை ஒதுக்கி அப்பாடசாலை புதுப்பொலிவு பெறச் செய்தார். ஆராதணை மண்டபத்திற்கு தளபாட வசதிகளைப் பெற்றுக்கொடுத்து அதனை வளம்பெற்றதாக்கினார்.
அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளளத் தலைவராக இருந்து புனர்வாழ்வு அமைச்சிலிருந்து பல இலட்சம் ருபாய்களை பெற்ற பள்ளிவாயல்களைப் புனர் நிர்மாணம் செய்து பொலிவடையச் செய்தார். அது மாத்திரமல்ல துறைமுகத்தில் முஸ்லிம்..தமிழ் சிங்கள ஆகிய சுமார் 150 இளைஞர்களுக்க வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து பொத்துவில மண்ணில் ஏழைத் தாய்மார்களின் அடுப்பை எரிய வைத்து மென்மேலும் அம்மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற வழிவகுத்தார்.
50 இளைஞர்களுக்கு சமுர்த்தி அதிகார சபையில் சமுர்த்தி; அபிவிருத்தி உத்தியோகத்தார் பதவியைப் பெற்றுக்கொடுத்தார். அதன் முலம் ஏழைகளின் வாழ்வு வளம் பெற உதவி செய்துள்hர்.
பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு புனர்வாழ்வு அமைச்சின் முலம் பல இலட்சம் ரூபாய்க்களை நட்டஈடு பெற்றுக் கொடுத்துள்ளார். அது போன்று பொத்துவில் மக்களில் 45 வீதமானோருக்கு ருபா 25,000 புனர்வாழ்வு நிதியைப் பெற்றுக் கொடுத்து அவர்களது குடிசைகளை நிரந்தர வீடாக அமைய வழிவகை செய்துள்ளார். இதன் மூலம் புனர்வாழ்வு அமைச்சின் மூலம் பல கோடி ருபாய்க்களை பொத்துவில் மக்களை வந்தடைந்து அவர்களின் வாழ்வு வளம் செழிக்க வழிகோரியுள்ளார்.
பொத்துவில் மண் மின்சாரத்தை காணாத காலத்தில் பள்ளிவாசல்களின் மின்சாரம் இல்லாமல் இருளடைந்திருந்து காணப்பட்ட வேளை பொத்துவில் 4ம் வட்டாரத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு இனத்துவேச அரசியல் வாதிகளின் எதிர்ப்பையும் மீறி மின்னொளி வழங்கி அப்பள்ளிவாசலைப் பொலிவுறச் செயதார்.
1979ஆண்டு காலப்பகுதியில் விவசாய உத்தியோகத்தராக இருந்து விவசாயிகளன் வாழ்வு மலர வழிசமைத்த அதேவேளை 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிராம சேவகராக இருந்து மக்கள் மனங்கவர் தலைவராக மனிதப் புனிதராக உயர்வடைந்தார்.
1994ம் ஆண்டு பயங்கரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட செங்காமக் கிராமம் கொட்டுக்கல் குடாக்கல்லி போன்ற கிராமங்களை முஸ்லீம்களின் செர்த்தாக இருந்போதும் பேரிணவாதிகளின் பிடியில் சிக்குண்டு இருந்தது. ஆதனை மீட்டெடுத்து செங்காமம் கிராமத்தில் முஸ்லீம் , தமிழ் மக்களை குடியமர்த்தி 650 குடும்பங்களுக்கு வாக்காளர் பதிவும் செய்து எல்லைக் காவலானார். அதன் காரணமாக செங்காமம் வாழ் மக்கள் அவர் உயிருடன் வாழும்போதே அசிஸ் நகர் எனப் பெயர் சூட்டி அவரை கௌரவப்படுத்தினார். குடாக்கல் பிரதேசத்தை பேரினவாதிகளிடமிருந்து பறித்தெடுத்து முஸ்லீம்களை குடிபெயரச் செய்த அம்மண்ணை காத்தார். கொட்டுக்கல் பிரதேசத்தில் முஸ்லீம்களை குடி அமர்த்தி அப்பிரதேசத்தில் தமிழ் முஸ்லீம் உறவுக்கு பாலம் அமைத்தார்.
2002ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இரண்டு வருடம் இருந்;த போதிலும் அதன் அதிகாரத்தை கொண்டு செங்காமம் கிராமத்தில் வாழ்கின்ற ஏழைச் சிறார்களின் நலன் கருதி அவர்களின் கல்வியை மேம்படுத்த அக்-செங்காமம் அல்-மினார் வித்தியாலயம் என்ற பாடாசலையை உருவாக்கி நிதியொதுக்கீடு செய்த கட்டிட வசதியும் செய்த கொடுத்ததோடு அப் பாடசாலையில் மஸ்ஜிதுல் பிலால் என்ற பள்ளிவாசலையும் அமைத்துக் கொடுத்தார்.
2003ம் ஆண்டு 20 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அப்பாடாசலை இன்று தரம் 1-9 வரை தரமுயர்த்தப்பட்டு எதிர் காலத்தில் அப்பிரதேசத்தின் மத்திய கல்லூரியாக வளர்ச்சி பெறும் என்பதில் எவ்வித ஐயமுல்லை.
முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபின் இணைப்புச் செயலராகவும் நுஆ கட்சியின் அமைப்பாளராகவும் செயற்பட்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைப்புத்திட்டங்கள், பொத்துவில் வைத்தியசாலைமீள நிர்மாணிப்பு போன்ற அபிவிருத்தி வேலைகளில் அமைச்சர் பேரியலுடன் இணைந்து செயற்பட்டார். இன்றும் தீர்வு காணப்படாமல் உள்ள பொத்துவிலில் விவசாயிகளது 501 ஏக்கர் காணிப்பிரச்சினையை சம்பந்தமாக தொடர்ந்து குரல் கொடுத்து அப் பிரச்சினை சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களிடம் வாதிட்டு வந்தார்.
இவ்வாறு கல்வி, சுகாதாரம், விவசாயம் மீன்பிடி, மின்சாரம் நீர்ப்பாசனம் போன்ற பல துறைகளிலும் மக்களுக்காக அரும்பாடுபட்டு தனது ஆயுளை கடத்தியுள்ளார். பல ஊர் மக்களாலும் மனிதம் உள்ள மனிதப் பழமாக மதிக்கப்பட்ட மர்ஹூம் எம்.பி.ஏ அசீஸ் எம்.பி அவர்களின் இழப்பினால் பொத்துவில் மக்கள் அரசியல் அனாதைகளாக அதிகாரம் செலுத்த தலைவன் ஒருவர் இல்லாமல் ஏங்கித் தவிக்கின்றார்கள். அன்னார் இந்த நாட்டில் எவ்வாறு மரியாதையுடன் நடந்து கொண்டார். என்பதையும் பொத்துவில் மக்கள் அவரை எவ்வளவு கனமாக அன்பாக அவர்களின் மனங்களில் சுமந்து வைத்திருந்தார்கள் என்பதையும் அவர் மரணித்த செய்தி கேட்டு அன்னார் இல்லத்தில் ஒன்று கூடிய பெருந்திரளான அரச தலைவர்கள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் பிரசன்னம் சான்று பகரும் என்பதில் ஐயமில்லை.
அன்னார் 65 வருடங்களும் 9 மாதங்களும் 16 நாட்களும் நிரம்பிய வேளையில் இவ்வுலகத்திலிருந்து மறுவுலகத்திற்கு விடைபெற்றுச் சென்றார். மேற்படி நற்கிரியைகளை செய்தவர் என்ற வகையில் அன்னார் தனிப்பட்ட முறையில் ஏதாவது குற்றம் குறைகளைச் செய்திருந்தாhல் அல்லாஹிவுக்காக அவரை மன்னிக்கும் படியும் அன்னாருடைய சேவையை அனுபவிக்கும் அனைவரும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் அனைவரும் அன்னார் நாளை மறுமையில் ஐன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தை பெற அல்லாஹ்விடம் பிரத்த்திக்குமாறு அசீசின் குடும்பத்தாரும் மற்றும் பொத்துவில் அசீஸ் பொதுப்பணி மன்றத்;தினரும் அசீஸ் பௌன்டேசன் உறுப்பினர்களும் வேண்டிக் கொள்கின்றனர்.
I Love him as a my Father. I am praying and asking Dua. that Allah want to give him a place in Jannathul Firdawss.
ReplyDeleteOur pottuvil's EVER GREEN மர்ஹூம் எம்.பி.ஏ அஸீஸ்.May allah bless him & his family ....Ameen,,
ReplyDeleteஅன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை கொடுப்பானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
ReplyDeleteA dedicated politician very close to the poor
ReplyDeleteA gentelman liked by youngsters
A courageous individual not feared when the justice is denied
A good hearted friend of everyone who seeked his assistance
Didnt collect wealth but peole
May allah give him a good place in his jannath.