Header Ads



''பாலஸ்தீனம் இனிமேல் தனி நாடு'' - பெருமையுடன் தெரிவித்தார் முகமது அப்பாஸ்



இனி பாலஸ்தீனம் தனி நாடு தான் என பெருமையுடன் தெரிவித்தார் பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அதிபர் முகமது அப்பாஸ். 

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பாலஸ்தீன தனி நாடு கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. பி்ன்னர் அமெரிக்கா மற்றும் எகிப்து தலையிட்டதன் பேரில் போர்நிறுத்தம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்தது. இதில் ஐ.நா.உறுப்பு நாடாக பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதில் நடந்த ஓட்டெடுப்பில் 138 நாடுகள் ஆதரவளித்தன. வரலாற்று சிறப்புமிக்க இந்த இக்கூட்டத்தில் பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வ அதிபர் முகமது அப்பாஸ் கலந்து கொண்டார்.நேற்று நாடு திரும்பிய அப்பாஸூக்கு ரமல்லாவில் உள்ள அதிபர் மாளிகையில் பாலஸ்தீனியர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.பின்னர் அங்குகூடியிருந்தவர்களிடம் அவர் பேசியதாவது,

நாம் வெற்றி பெற்று‌வி்ட்டோம் இனி பாலஸ்தீனம் தனிநாடு தான். இது பாலஸ்தீனியர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இதனை நாம் தற்போது கொண்டாடும் தருணம் வந்துவிட்டது. நம்மிடம் இருந்த பிரிவினைக்கு ‌முற்றுப்புள்ளி வைத்துவிட்டது ஐ.நா. இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ‌என்றார். முன்னதாக பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார் அப்பாஸ்.


No comments

Powered by Blogger.