Header Ads



'இறைவனின் ஏற்பாடு' - ஹலால் குறித்து சிங்கள சமூகம் அறிந்துகொள்ளும் வாய்ப்பு (படங்ள்)



(ஜே.எம்)

கடந்த  22ம் திகதி வெளியிடப்பட்ட ''சொல்லி வேலையில்லை'' என்ற ஆக்கமொன்றில் 'லங்காதீப ஹலால்' விளக்கம் பற்றி அலசி ஆராய்திருந்தோம். அதில் ஒர் இடத்தில் என்ன நடக்கப் போகிறது என சற்று நிதானமாக அவதானிக்கலாம் என்ற கருத்தும் இருந்தது. 

அதை மெய்யாக்குவது போல் 23ம் திகதி மண்ணின் மைந்தர்கள் வெளியிட்ட 'உலமா பயந்து விட்டார் என்ற சிங்கள போஸ்டரையும் பார்த்திருப்பீர்கள். 

எம்மவருக்கு உலமா சபை எழுதிய விளக்கத்தை வாசிக்க பெனடோல் தேவைப்பட்டது போல் அவர்களுக்கு தேவைப்படவில்லை. வாசிக்காதவர்களும் வாசிக்கும் படியாக அதை மறு பிரசுரம் செய்தது மட்டுமல்ல எமது ஆக்கத்தில் கூறப்பட்ட குறைகளும் அதில் நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது.

அதாவது கலர் பிரிண்ட், கிரபிக் டிசைன், போதாமைக்கு எமது உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தியின் புகைப்படத்தையும் போட்டு மறு பிரசுரம் செய்துள்ளார்கள். வாசிக்கத் தவறிய சிங்களவர்களுக்கு மீள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்கள் எமது மண்ணின் மைந்தர்கள்.

எமது சத்திய மார்கத்திற்கு அவர்களே இலவச விளமபரத்தை தேடித் தருவது போல் அவர்களது செய்கை அமைந்துள்ளது. இது குழம்பியுள்ள அவர்களது புத்தி ஜீவிகளைத் தூண்டும் செயலாகவும் கருதலாம். அப்படியாயின் அவர்களில் பலர் இஸ்லாம் பற்றியும். ஹலால் ஹராம் பற்றியும்  தேடிப்பார்க்க அல்லது வாசித்துப் பார்க்க ஒரு தூண்டுதலாக இருக்கும்.

இலங்கை முஸ்லிமகளுக்கு எதிராக அவர்கள் வெளியிடும் மற்றும் சில பிரசுரங்கள் இதோ. இவையும் பழம் நழுவிப் பாலில் விழுந்தமாதரி ஆகவேண்டுமென உள்ளாரப் பிராத்திக்கிறேன்.
















3 comments:

  1. Halaal will take more popularity,by bodu bala sena, ow sinhalese trying to learn bout the haram and halaal.this may guide to convert more sihalese to islam.alhamdulillah

    ReplyDelete
  2. Alhamdulillaah....

    this rally is like 9/11 NYK attack.that helped the US people to know islam.they are covertin to islaam day by day.maashaa allah

    ReplyDelete

Powered by Blogger.