'ஷிராணி பண்டாரநாயக்கா ஜெனீவா சென்று இலங்கைக்கு எதிராக சாட்சி சொல்ல உள்ளார்' - விமல்
(அஸ்ரப் ஏ. சமத்)
பிரதம நீதியரசர் சிறாணி பண்டாரநாயக்க எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டிற்குச் சென்று இலங்கை பற்றி சாட்சி சொல்வதற்கே முயல்கின்றார். அவர் தற்போழுது பிரதம நீதியசராக செயற்படாமல் அவர் இந்த அரசிற்கு எதிராக செயற்பட்டு அரசியல் செய்கின்றார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கடுவலையில் நடைபெற்ற கூட்டத்திலேய அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,,
இலங்கையில் நீதி, சட்டம் ஒழுங்கில் சில தனி நபர்களது விருப்பு வெறுப்புக்களுக்கு அமைவாக நீதித்துறை செயல்படுகின்றது. இந்த நாட்டில் நடைபெற்ற கொடுர யுத்தத்தினை வென்றெடுத்த பாதுகாப்பு படையினர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி அதற்காக ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவே இந்த நாட்டில் உள்ள சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களின் வலையில் பிரதம நீதியரசரும் விழுந்துள்ளார். இந்த நாட்டில் பிறந்தவர்கள் சிலர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர் அவர்களே இந்த அரசின் ஆட்சியையும் ஐனாதிபதியையும் விரும்பாதவர்கள்.
இந்த அரசின் கீழ் மாபெரும் மக்கள் சக்தி இருப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்பாதவர்கள். இவர்களுக்கு இந்த நாட்டில் தொடர்ந்தும் ஏதாவொரு யுத்தம் அல்லது குழப்பம் இருந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அதிக நன்மை கிட்டும். புணம் கிட்டும் அவர்களது குடும்பங்கள் அந்த நாடுகளில் சந்தேசமாக வாழழாம். இப்படியானவர்கள்தான் இந்த நாட்டில் அடிக்கடி இடம்பெறும் சிறு சம்பவங்களை வைத்து அரசியல் லாபம் தேடுகின்றனர்.
சிராணி திலக்கவர்த்தன நிதிபதியின் கீழ் செலிங்கோ கிரடிட் கார்ட் வழக்கை விசாரித்துக்கொண்டிருந்தார். அவரை உடனடியாக நீக்கி இம் வழக்கின் விசாரணையை பிரதம நிதியரசர் சிராணி பண்டாரநாயக்க மேற்கொண்டுள்ள்hர். இதனால் சிலிங்கோ வைப்பிலிட்ட 900 பேருக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை மாறாக பிரதம நீதியாரசர் சிரானி பண்டாரயகக சிலிங்கோ நிர்மாணித்த ரில்லியம் என்ற தொடாமாடி வீடமைப்புத்திட்டமொன்றை கொள்முதல் செய்துள்ளார். சிலிங்கோ சொத்துக்களை விற்பதற்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது யார்? இந்த நாட்டில் இலவசக் கல்வியை கற்று கொழும்ப பல்கலைக்கழகத்தில் பட்டத்தை படித்து அரச உத்தியோகத்தராக அரச சேவையில் இணைந்து அவர் இந்த நாட்டின் நீதித்துறைக்கு செய்துள்ள கைங்கரியம் இதுதானா? இந் நீதிதேவதையின் கையில் இந் நாட்டின் நீதியை எவ்வாறு ஒப்படைப்பது என அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.
Vimal says that the free Reading
ReplyDeleteNonsense to think that you will get the verdict catakam
It comes right to your communal politics. Anyone who is stupid now
If there is a competition for Ultimate stupid star,The winner will be Mr Wimal ooravansa along with Mr Rajithe soanaratne.
ReplyDelete