ஹலால் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்களில் பாதிப்படைவது யார்..?
(ஜுனைட் நளீமி)
ஹலால் தொடர்பிலான பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் எழுந்துள்ள நிலையில் இதன் எதார்த்தங்கள் பற்றி எமது சமூகம் பிற சமூகத்தை தெளிவு படுத்துவதற்கு முன்னர் சுய தெளிவொன்றை பெற வேண்டியது தேவைப்பாடாகவுள்ளது என்பதனை சம்பவம் ஒன்று எனக்கு கோடிட்டு காட்டியது.
பெறும்பான்மை சமூகத்தை சேர்ந்த பெரு நிலை அதிகாரி ஒருவரை இன்று 24-12- 2012 அவரது அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. ஹலால் பற்றிய அவர் தரப்பு சார்ந்த வாதத்தை அழகாக அவர் முன்வைத்தார். நட்பு ரீதியான கருத்துப்பறிமாற்றமாக இருந்தாலும் இவர்கள் எவ்வாறு பிழையாக எமது சமூக நடவடிக்கைகளை பார்க்கின்றனர் என்பதனை அவரது கருத்துக்களினூடாக அறிய முடிந்தது.
எனவே இவ்விடயங்கள் தொடர்பாக பூரண தெளிவினை ஒவ்வுரு முஸ்லிமும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாய நிலையில் நாடு உள்ளது என்பதனை என்னாள் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் இன்று பல்லின மத கலாச்சார விழுமியங்கள் கொண்ட இந்த நாட்டில் பெரும் பான்மை சமூகத்தில் வாழும் சிறுபான்மை எப்போதும் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான கருத்தியல் ரீதியாகவும் பண்பாட்டு விழுமியங்களூடாகவும் தம்மை தயார் படுத்த வேண்டிய தேவையையும் எவரும் மறுக்க முடியாது.
இனி விடயத்துக்கு வருவோம். ஹலால் சான்றிதழ் இந்த நாட்டின் பெளத்த கலாச்சாரத்துக்கு சவாலாக அமைகின்ற அம்சங்களில் ஒன்றாகும் என்ற சில தீவிர பெளத்த தீவிரவாத இயக்கங்களின் குற்றச்சாட்டாக இருக்கின்ற போதும் இதன் பிண்ணனி தொடர்பில் நிறைய வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டிய விடயங்கள் உள்ளன.
குறிப்பாக ஹலால் சான்றிதளினால் நன்மை பெருவது இந்த நாட்டின் ஏற்றுமதி வியாபாரமே தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை விளங்கி கொள்ள வேண்டும். ஏனெனில் இன்று இலங்கையின் ஏற்றுமதி சந்தைவாய்ப்பு முஸ்லிம் நாடுகளை நோக்கியதாகவே அமைந்துள்ளன. தேயிலை தொடக்கம் கோழி, பாம் வகைகள் உள்ளிட்ட தன்னீர் போத்தல்கள் ( மினெரல் Bஒட்ட்லெ) வரை பல்வேறு பொருட்கள் இன்று இலங்கையின் பெரும்பான்மை இன சகோதரர்களின் கம்பனிகளால் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
முஸ்லிம் நாடுகளைப் பொருத்தவரையில் ஹலால் உறுதிப்படுத்தப்படாத எந்தவொரு பொருகளையும் இறக்குமதி செய்வதை தவிர்ந்துகொண்டே வருகின்றன. இந்த வகையில் ஹலால் உத்தரவாதம் இவ்வகை ஏற்றுமதியாளர்களுக்கு தமது வர்த்தக நடவடிக்கைகளை விருத்தி செய்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளன. இவற்றுக்கு ஹலால் சான்றிதழ் கட்டாயப்படுத்தி கொடுக்க வேண்டிய தேவை அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவிற்கு தேவையானதாக இல்லை.
உதாரணமாக இலங்கையில் இருந்து கோழியினை ஏற்றுமதி செய்யும் PRIMA CHICKEN நிருவனம் 2009ம் ஆண்டின் பின்னர் தமது ஹலால் சான்றிதழை எடுப்பதில்லை என தீர்மானித்தது. அடுத்த வருடமே அந்நிருவனத்தின் ஏற்றுமதியில் பாறிய வீழ்ச்சி ஏற்பட்டதினை அடுத்து பல மில்லியன் ரூபாய்க்கள் நஷ்ட்டம் ஏற்பட்டது. மீண்டும் அந்நிறுவனம் ஹலால் சான்றிதழ் தேடி பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகியது.
அவ்வாரே VENDOL LANKA நிருவனம் ஹலால் சான்றிதலை புறக்கனித்து பின்னர் தமது ஏற்றுமதியினை சீர்படுத்த ஹலால் சான்றிதழை புதுப்பித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல உதாரணங்கள் அடுக்கி கொண்டு போக முடியும்.
இன்று 150க்கும் மேற்பட்ட பெரும்பான்மை சமூகத்தின் நிறுவனங்கள் இச்சான்றிதழை பெற்றிருப்பதன் நோக்கம் இதுவேயன்றி வேரெதுவும் இல்லை. உண்மையில் இதன் நன்மை பலவாக இருந்த போதும் இதற்கெதிராக சிலர் மதச்சாயம் பூசி முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ள பல காரணங்களும் பின்புலமாக உள்ளது. குறிப்பாக இச்சான்றிதழை பெறுவதற்கு சில கம்பனிகள் பெருந்தொகை பணம் செலவிட வேண்டியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
உண்மை என்னவெனில் சில பொருட்களை பார்த்த உடனே ஹலால் என சொல்ல முடியும். சில பொருட்களை அரச உணவு தர நிர்ணய சபையின் ஆய்வுக்காக பெருந்தொகை பணத்தை செலவிட்டு பரீசீலிக்க வேண்டி உள்ளது.இன்னும் சில போது மலேசியா போன்ற சில நாடுகளுக்கு பொருட்களை கொண்டு சென்று பரீசீலிக்க வேண்டி உள்ளமையும் இச்சான்றிதழ் பெருவதற்காக சிலர் பெருந்தொகை பணம் செலவிட வேண்டியுள்ளமைக்கான காரணமாக உள்ளது.
இதே போன்று சில பொருட்கள் தொடர்பாக நாட்டின் பல பிரதேசங்களுக்கு சென்று வர வேண்டியுள்ளதுடன் அடிக்கடி சென்று பரீசீலிக்க வேண்டியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இவ்வாரு இருக்க, சில வியாபார போட்டிகளும் வியாபார தந்திரங்களும் இனசாயம் பூசி தமது இலக்கை அடைந்துகொள்ள முயற்சிக்கின்றன.
உதாரணமாக மெலிபன் பிஸ்கட் கம்பனிக்கெதிரான பிரச்சாரத்தில் மற்றொரு முன்னாள் கூட்டு தொழில் நிறுவனம் இறங்கியுள்ளதுடன் பெரும்பான்மை சமூகம் நாம் என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகத்தை பிழையாக வழி நடாத்த முயற்சிக்கின்றது.
அதே போன்று பெளத்த அடிப்படைவாதத்தினை ஊக்குவித்து நிதி உதவி வழங்கிவரும் நிறுவனங்களும் இந்த சான்றிதழை பெற வேண்டியுள்ளதனால் இப்பிரச்சாரங்களை முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றனையும் குறிப்பிடத்தக்கது.
அதே போன்று பல்தேசிய நிறுவனங்களின் விளம்பரப்போட்டிக்கு முகம் கொடுக்க முடியாத இத்தகைய நிறுவனங்கள் பல இலட்சம் ரூபாய்க்களை விளம்பர நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தேவையுமுள்ளது. இதனை தவிர்த்து இலகுவான முறையில் தமது வியாபாரப் பொருட்களின் விளம்பரத்தை நாட்டுப்புறம் வரை கொண்டு செல்வதற்கான ஊடகமாக இத்தகைய இனவாத யுக்தியை கையாள்வதும் விளக்க வேண்டிய அம்சமாகும்.
ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது ஹலால் சான்றிதழை இரத்துச்செய்ய அரசாங்கமோ அல்லது சான்றிதழை புறக்கனிக்க இத்தகைய சுயநலமிக்க தந்திரோபாய நிருவனங்களோ முற்படுகின்ற பட்சத்தில் பாதிப்ப்டையப்போவது நாட்டின் ஏற்றுமதி வருமானம் மாத்திரமன்றி இத்தகைய இன சாயலில் தமது விளம்பர யுக்தியை பயன்படுத்தும் நிறுவனங்களுமே என்பதில் ஐயமில்லை.
good approach
ReplyDelete
ReplyDeleteThis coversation was on FB yesterday with a FB group. is it true that ACJU earns Rs.787 millions from halal cerficate per year?
Chameera Dedduwage Mohamed Jemaldeen Nowfer: I think you still don't understand one simple yet important point: we don't have anything against YOU eating Halal. We have a problem with YOU, taking our money to certify food as Halal, which has only use for YOU, not us. Plus, 787 million Rupees a year taxed from non-Muslims? wow. If the country is like this right now, I can't even begin to imagine what it would be like under a Muslim governance!!
21 hours ago · Edited · Like · 3