Header Ads



ஈரானில் காலை தொழுகையின் போது விமானங்கள் பறக்க தடை


ஈரானில், காலை தொழுகையின் போது, விமானங்கள் பறக்க, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.ஈரானில், சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.பெண்கள் பர்தா அணிந்து தான் வெளியே வரவேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் இன்று வரை, பின்பற்றப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, "காலை தொழுகையை அவசியம் செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த நேரத்தில் விமான புறப்பாடு இருக்கக்கூடாது. காலை தொழுகை முடிந்து அரை மணி நேரத்துக்கு பிறகு, விமானங்கள் புறப்பட வேண்டும். இதன் மூலம், அனைவரும் காலை தொழுகையில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்' என, அந்நாட்டு அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

Powered by Blogger.